தளிர் பதினைந்து

by நூருத்தீன்
ஆசிரியர்நூருத்தீன்
பதிப்பகம்அமேஸான்
பதிப்புடிசம்பர் 2020
வடிவம்Kindle
பக்கம்
விலை₹ 49.00

இந்தத் தொகுப்பில் நான் முதலில் வாசித்திருந்த சிறுகதை மிஸ் ஸ்நேகா. ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன் சென்னையில் மிகவும் எதேச்சையாக நூருத்தீனை சந்தித்தபோது. படித்து முடித்ததும் புன்முறுவலுடன் எனக்குள்ளேயே நான் சொன்னது, “ஹை.. சுஜாதா..”. கிட்டத்தட்ட சுஜாதாவின் எழுத்து நடை, வார்த்தை பிரயோகம் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான ஆச்சரியமூட்டும் தமிழ்ப் பதங்கள். சிறுகதைகளில் படாரென்று பொட்டில் அடிக்கும் இறுதி வரிகள். அனைத்தும் இன்று நூருத்தீன் கைவசம்.

தளிர்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களத்தில் அசைந்து, வெவ்வேறு உணர்வுகளை வழங்கி வருடி, நம்மை நோக்கிப் புதிதாகத் தலையசைக்கின்றன. முதுமை, ஏழ்மை, ஏமாற்றம், நெகிழ்ச்சி, மனிதம், அதிர்ச்சி என்று பற்பல நிறங்களை, வடிவங்களைக் காட்டும் கெலிடோஸ்கோப் இந்தச் சிறுகதைத் தொகுப்பு.

தளிர் ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்கும்போது அது ஓர் ஓங்கி வளர்ந்த விருட்சமாக நமக்குள் விஸ்வரூபம் எடுக்கும். அம்மாய வித்தை அனுபவத்தை எதிர்கொள்ள உங்களை வரவேற்கிறேன்.

Related Articles

Leave a Comment