ஆசிரியர் | பா. தாவூத்ஷா, B.A. |
பதிப்பகம் | Darul Islam Family |
பதிப்பு | 2022 |
வடிவம் | |
பக்கம் | 176 |
விலை | ₹ 0.00 |
குலஃபாஉர் ராஷிதீன் என்ற தலைப்பில் முதல் நான்கு கலீஃபாக்களின் வரலாற்றை தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்கள் சென்ற நூற்றாண்டின் மத்தியில் எழுதி வெளியிட்டார். ஒவ்வொரு நூலும் அன்றைய வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இரண்டு, மூன்று பதிப்புகள் வெளியாகி விற்றுத் தீர்ந்தன. அந்நூல்களை இன்றைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஆவணப்படுத்தும் முயற்சியே இந்த PDF நூல்.
அவ்வரிசையில் முதல் நூலாக வெளிவந்த அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களின் வரலாறு மூன்று பதிப்புகளாக 1934, 1946, 1953ஆம் ஆண்டுகளில் பிரசுரமாயின. 1964ஆம் ஆண்டு அடுத்த பதிப்பு வெளியிட ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்கள் தம் கைப்பட சில திருத்தங்கள் செய்து வைத்திருந்த பிரதி என்னிடம் உள்ளது. அத்திருத்தங்களையும் உள்ளடக்கியதே இந்த பதிப்பு.
நீண்ட நெடிய பத்திகளை சிறு பத்திகளாகப் பிரித்ததும் அரபு மொழிச் சொற்களுக்கு உச்சரிப்புக்கு ஏற்ப (என்னால் இயன்ற அளவு) எழுத்துகளைத் திருத்தியதும் மட்டுமே இதில் என் குறுக்கீடு. மற்றபடி, பா. தாவூத்ஷா அவர்கள் அன்று எழுதி வெளியிட்ட வாசக வடிவம் இதில் அப்படியே உள்ளது.
–நூருத்தீன்