அனுபந்தம் – II

by பா. தாவூத்ஷா

மத தாராளம்

குர்ஆனும் வேதங்களும்

“மத விஷயத்தில் கட்டாயமில்லை: மெய்யாகவே சரியானதென்பது தவறானதினின்றும் ஸ்பஷ்டமாகப் பிரித்துக் காட்டப்பட்டிருக்கிறது…” (குர்ஆன் 2:256).

“மேலும் சொல்வீராக; உண்மையென்பது உமது நாயனிடத்திலிருந்து வந்திருக்கிறது; ஆதலின், இஷ்டமுள்ளவர் நன்னம்பிக்கை கொள்ளட்டும்; இஷ்டமில்லாதவர் நிராகரிக்கட்டும்…” (குர்ஆன் 18:29).

“உம்முடைய நாயன் நாடியிருப்பானாயின் நிச்சயமாகவே இவ்வுலகத்திலுள்ளவர்கள் அனைவரும் நன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள்; ஆதலின், அவர்களெல்லாம் நன்னம்பிக்கை கொண்டவர்களாக மாறுமட்டும் நீர் நிர்ப்பந்தம் செய்வீரோ?” (குர்ஆன் 10:99).

“ஆனால், அவர்கள் முதுகைத் திருப்பிக் கொள்வார்களாயின், பிறகு (நீர் அறிவிக்கவேண்டியதை) ஸ்பஷ்டமாக அறிவித்துவிடுவதே உமது கடமையாகும்.” (குர்ஆன் 16:82).

“இந்த அறிவிப்பின்மீது அவர்கள் நன்னம்பிக்கை கொள்ள வில்லையாயின், பிறகு அவர்களுக்காக நீர் கொள்ளும் வியாகுலத்தினால் உம்மையே மாய்த்துக்கொள்வீர் போலும்!” (குர்ஆன் 18:6).

“மேலும் ஆண்டவன் நாடியிருப்பானாயின், அவர்கள் நிச்சயமாக உம்முடன் யுத்தம் புரியுமாறு அவர்களுக்கு உம்மைக் காட்டினும் அதிகமான சக்தியைக் கொடுத்திருப்பான்; ஆதலின், அவர்கள் உம்மை விட்டுப் பின்வாங்கி, உம்முடன் சண்டை செய்யாது ஒழிந்து, உம்மிடம் சமாதானத்துக்கு வருவார்களாயின், பிறகு அவர்களுக்கு விரோதமாய் நடக்கும்படி ஆண்டவன் உமக்கொரு வழியும் கொடுக்கவில்லை.” (4:90).

“யுத்தத்தினால் கொல்லப்படும்படியானவர்களுக்கு, (அவர்கள்மீது) அக்கிரமம் செய்யப்படுகின்றமையால் (தற்காப்பு யுத்தத்துக்காக) அனுமதியளிக்கப்பட்டது; மேலும் நிச்சயமாகவே அல்லாஹ் அவர்களுக்கு உதவி புரிவதன்மீது ஆண்மையுள்ளவனாய் இருக்கிறான்.

“அவர்கள், ‘எங்கள் நாயன் அல்லாஹ்வாய் இருக்கிறான்,’ என்று சொன்னதற்காகவேயல்லாமல், வேறொரு குற்றமுமின்றியே தங்கள் விடுதிகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டார்கள். மேலும் அல்லாஹ் மனிதர்களுள் சிலரைக்கொண்டு சிலரைத் தடுக்காமலிருப்பானாயின் (பாதிரிகளின்) மடாலயங்களும் கோயில்களும் (யூதர்களின்) ஆலயங்களும் அல்லாஹ்வின் பெயர் அதிகம் தியானிக்கப்படும் மஸ்ஜித்களும் தகர்க்கப்பட்டுப்போம்…” (22:39,40).

“வேதங்களைப் பற்றிக் குறைவாகப் பேசுகிறவர்களைத் தாக்கிக்கொண்டு, ஒரு கத்தியைப்போல் எமனுடைய ஸ்வரூபத்தில் நீ வெளிக்கிளம்பிச்செல்வாய்.” (அதர்வண வேதம், 12:5:55).

“ஆதலின், பிராம்மணனுக்குக் கொடுமை செய்கிறவன், குற்றவாளி, உலோபி (அஃதாவது, பிராம்மணனுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடாதவன்) தெய்வத்தைத் தூஷிக்கிறவன் ஆகியவர்களுக்குப் பரிகாரியின் கத்தியே போன்ற கத்திகளால் நூறு வெட்டு வெட்டி, அவர்களுடைய தோட்களையும் சிரங்களையும் துணித்து விடுவாயாக. அப்படிப்பட்டவனுடைய தலையினின்றும் உரோமத்தைப் பிடுங்குவாயாக; அவனுடைய உடம்பினின்றும் தோலை உரித்து விடுவாயாக. அனுடைய தசை நார்களைக் கிழித்து அவனது சதை முழுதும் அங்கத்தினின்றும் துண்டு துண்டாகக் கீழே விழும்படி செய்துவிடுவாயாக. அவனுடைய எலும்புகளை நொறுக்கிப் பிளக்கச் செய்து உள்ளிருக்கும் மூளைகளை வெளியிலெடுத்து விடுவாய். அவனுடைய உறுப்புக்களையும் பூட்டுக்களையும் பிரித்து விடுவாயாக.” (அ. வணம், 12:5:71).

“ஆரியரல்லாதவரை நாசப்படுத்தக்கூடிய நெருப்பை நெய்விட்டு அடுப்பேற்றி எரிப்பாய்.” (௸, ௸. 2).

“ஏ, கடுமையாகத் தண்டிக்கிறவனே! மதத்துக்கு மாறாயிருக்கும் எதிரிகளை எப்பொழுதும் சுட்டெரித்துக்கொண்டு மேன்மேலும் செல்லக்கடவாய்; ஓ, உயர்ந்தவனே! மேன்மைக்கெல்லாம் எஜமானே! நம்முடைய பகைவர்களுக்குத் தைரியம் ஊட்டுகிறவனைக் காய்ந்த விறகை எரிப்பதேபோல் நிர்மூலமாய் எரித்துவிடக் கடவாய்.” (எஜுர், 13:12).

“உண்மையான பலத்தை மேற்கொண்டு வைஸ்வ நாராவை (அஃதாவது. எல்லா விடுதிகளினின்றும் சேகரிக்கப்பட்ட நெருப்பை)க் கொண்டு நம்மைத் துன்புறுத்திநோ புண்டாக்கு கிறவனை, நம்மை விரேதியாகப் பாவிக்கிறவனை ஆகிய அனைவரையும் நன்றாக எரித்து விடக்கடவாய். நம்மால் துன்பமடையாமல் நமக்குத் துன்பத்தை விளைக்கிறவனையும், நம்மால் துன்ப மடைந்தபின் நமக்குத் துன்பத்தை விளைக்கிறவனையும், வைஸ்வநாராவின் இருபெரும் கொடுக்குக்குகளுக்கு இடைவெளியில் நான் இருந்து கொள்வேன்.” (அதர்வண வேதம், 4:36:12).

இவை ஆரியரின் கருத்துக்கிணங்க மொழி பெயரக்கப்பட்ட விஷயங்களாகும்.

 (தொடரும்)

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment