வேதங்களின் துர்ப்போதனை – 2

உண்மையிலே ஆரியரின் வேதங்களின் முன்னே எமது திருமறையானது மர்ம ரகசிய விஷயத்தில் எதிர்நிற்க முடியாமைக்காகப் பெரிதும் நாம் வருந்துகிறோம். ஏனெனின், எமது வேதம் மனிதப் பெண்டுகள்

குதிரைகளைப் போன்ற மிருகங்களுடனும் நியோகம் புரிதற்கு அனுமதியளித்திருக்கவில்லையே. இன்னமும், அன்னவரின் வேதங்களைப்போல் குர்ஆன் ஷரீபானது கொக்கோக முனிவரின் முதனூலாயும் அமைந்திருக்கவில்லையே. கேவலம் மர்மஸ்தானங்களின் நாமங்களையும் பகிரங்கமாக எமது திருமறையானது எங்கணும் கூறியிருக்கவில்லை. மேலும் நரமேதம், அஜமேதம், அசுவமேதம், பசுமேதம் போன்ற நல்ல நாஜுக்கான யாகாதி கிரியைகளுக்கும்* எமது வேதத்தில் இடமில்லை.

எனவே, இத்தகைய காரணங்களினால்தாம் ஆரிய வேதங்களை ஒப்புக்கொண்டு ஒன்றுக்குப் பத்தாய் ஒழுகிவரும் நம் பரிசுத்த நண்பர்களுக்கு நமது குர்ஆன் ஷரீபிலுள்ள நல்லுபதேசங்கள் உண்மையிலே நன்மையாய்க் காணப்படுவதில்லை. இன்னமும் காதல், கவறாடல், கள்ளுண்ணல், கொலை செய்தல் முதலிய மனோம்மியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய சாதனமாய்க் குர்ஆன் ஷரீபு அமைந்திருக்கவில்லை. ஆனால், ஆரிய வேதங்களோ அவர்கள் சர்வதாராளமாய் யாதொரு தட்டுத்தடங்கலுமின்றி நடந்துகொள்வதற்கு வேண்டிய உயரிய உபதேசங்களைப் போதித்து நிற்கின்றன.

உதாரணமாக, வேதங்களிலிருந்து மிகமிகச் சிற்சில உபதேசங்களை மட்டுமே நாம் இதன்கீழ் எடுத்து வியவகரிப்பாம்: அவர்களுடைய வேதப் பொக்கிஷங்களிலுள்ள எல்லா இரகசியங்களையும் எடுத்து வெளியில் விடுவோமாயின், அதற்கு இந்நாட்டில் இப்பொழுதுள்ள ஆங்கில அரசாங்கத்தார் அனுமதியளிக்க மாட்டாரென்றே அஞ்சுகிறோம். மேலும் அப்படிப்பட்ட ஆபாஸங்களை எழுதுவதற்கும் எமது ‘பேநாயானது’ மிகவும் சங்கோசங் கொண்டு ஒதுங்கி நிற்கின்றது. ஆயினும், மிக மிக மேற்போக்கான சிலவற்றையே நாம் திறந்து காட்டுவோம்:

எப்படிப் பசுக்கள் தமக்குவேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளைச் சந்தோஷப் படுத்துகின்றனவோ, அப்படியேபோல் நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும் மற்றவர்களையும் திருப்திசெய்து சந்தோஷப் படுத்துவார்களாக” – (யஜுர் 17:3).

ஷாபாஷ்! சுவாமிஜீயின் இந்த யஜுர்வேத மந்திரத்தில் கேவலம் சுயநலத்தின் வாடையே வீசுகின்றது. இன்னமும் வேத பகவான் மேற்கூறிய மந்திரத்தின் உதவியால் தயானந்த் மஹாராஜின் வண்டியின் சக்கரத்தைத் தடுத்துக்கொண்டிருக்கும் தடையாணியைப் பிடுங்கி மிக விரைவாக அதை ஓடும்படி செய்துவிட்டார். இதனால் வேதம் அவருக்குப் பெரிய நன்றியையே செய்திருக்கிறது. சரஸ்வதி மஹாராஜ்! இதனால்தான் தாங்கள் வேதத்தின் நன்றியைத் தாங்கமுடியாது அதன் சுமையால் அழுந்திப்போய்த் தங்களுக்கு நன்றி செய்த வேதத்தை நானாவிதமாகவும், புகழ்ந்து பூரிப்படைந்திருக்கிறீர்கள். ஏனெனின், “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது,” என்றும், “செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும், வானகமும் மாற்ற லரிது,” என்றும் குறளுக்குடையார் கூறிந்போந்துளார்.

அவ்வாறே எமது குர்ஆனே மஜீதானது தங்கள் எதிர் நோக்கங்களைப் பூர்த்திசெய்ய முடியாமலிருத்தலினால் அது குற்றமுடையதாய் மாறிவிட்டது; இக்காரணத்தினால்தான் அதைத் தாங்கள் நஞ்சேபோல் பாவித்திருக்கிறீர்கள். இன்னமும், இக் காரணத்தினாலேயே தங்களுக்கு மண்டலேசுவர ரெல்லாம் பெரும்பெரும் பட்டங்களையும் வினியோகித்திருக்கின்றார்கள். அல்லாஹ் ஒருவனே உமக்குப் பிரதிபலலைன அளிக்கப் போதுமானவன். எனவே, தாங்களே மேற்கூறியவண்ணம் யஜுர்வேத மந்திரத்துக்கு அர்த்தம் செய்துவிட்டு, எமது குர்ஆன் ஷரீபின் விஷயமாய், “இஃது ஒரு சர்வ சாதாணமான மனிதனிடத்திலிருந்துகூட உண்டாவதற்குத் தக்கதன்று,” என்று வாய் கூசாது கூற முன்வந்ததுதான் விந்தையினும் மகா மேலான விந்தையாய்க் காணப்படுகின்றது.

இம்மட்டோடு நில்லாமல் தாங்கள் கோவை செய்தெழுதிய “சத்தியார்த்த பிரகாசம்” என்னும் அசத்தியார்த்த பிரசாரத்தில் இதுபோன்ற, அல்லது இதைக் காட்டினும் நீசத்தனமான ஏச்சுக்களும் வசைமொழிகளும் மிக்க நிரம்பிக் கிடப்பதுமல்லாமல், ருக்வேதத்துக்கு எழுதப்பட்டிருக்கும் மகீதரரின் பாஷ்யத்தலிருந்து தாங்களே சுருக்கமாய்ப் பொறுக்கியெடுத்து எழுதியிருக்கும் வாசகங்களை வாசித்துவரும் சகோதரர்கள் தங்களை மஹரிஷி என்றும் சரஸ்வதி என்றும் கூறுவது ஒரு பக்கத்திலிருக்கட்டும்; தங்களை ஒரு சர்வ சாதாரணமான மனிதனென்றுகூட ஏற்றுக் கொள்வதில் சந்தேகங் கொள்ளாமலிரார். ஏனெனின், இழிவான வசனங்களைச் சிரமேற்கொண்டு திரியும் மனிதர்களும் இழிசனராகவே கருதப்படுவார்கள். இஃது ஒருபுறம் கிடக்க.

நாங்கள் தங்களுடைய வேதங்களனைத்தும் பொய்யான போதனைகளை யுடையனவென்றும் துர்ப்பிரயோகங்களின் பொக்கசங்களென்றும் கெட்ட நடத்தைகளுக்குரிய புதையல்களென்றும் யாருக்கும் அஞ்சாமல் வெளியில் எடுத்துக்கூற முன்வருவோம்; இல்லையென்று நிரூபிக்கக் கூடியவர்கள் முன்வரத் துணிவார்களாயின், மிகுதியையும் பிறகு பார்த்துக்கொள்வோம். எனவே, இப்பொழுது நமது கொள்கைக் கேற்பச் சிற்சில சாம்ப்பிள்களை மாத்திரம் ஆரிய வேதங்களினின்று ஈண்டெடுத் தெழுதுவாம்.

ஆஹா! வேதங்களின் இன்பசாகர மயமான இப்படிப்பட்ட போதனைகளை அறிந்துகொண்ட பின்பு அவர்கள் மற்ற மதங்களை ஏற்றுக்கொள்வது எப்படித்தான் இவ்வுலகில் இயலும்? மற்ற மதங்களை நீசத்தனமாய் ஏசுவதும் அவர்களுக்குள் ஏன் புளகாங்கிதத்தை உண்டுபண்ண மாட்டாது?

……. லிங்கம்….. யோனியுள்……. நுழைவதால் தனக்குச் சொந்தமான இந்திரியத்தை வார்க்கிறது; அந்த வீரியம் கெட்டியான ஜவ்வில்……. விருத்தியாய்க் கொண்டு வருகிறது,” – (யஜுர், 19:76).

ஆஹா! என்னவிதமான அழகான ஒழுங்கான, தயானந்தருக்குத் திருப்தியான வார்த்தைகளால் அந்தப்புரத்திலிருக்கும் அவயவங்களெல்லாம் போட்டோப் படம் பிடித்ததேபோல் வெளியிலெடுத்துப் பரப்பிவைக்கப்பட்டிருக்கின்றன! பிறகு யஜுர் வேதப் பண்டிதரைக் காட்டினும் ஏன் கொக்கோக முனிவரை எல்லோரும் வெறுப்புடன் நோக்குகின்றனர்? மீண்டும் யஜுர், 28:32-இன் கருத்தை நோட்டமிடுக:

ஏ, மானிடர்காள்! எப்படி எருதுகள் பசுக்களுடன் சேர்ந்து கன்றுகளைப் பெருக்குகின்றனவோ, அப்படியேபோல் கிருகஸ்தாசிரமவாசிகளும் ஸ்திரீகளைக் கர்ப்பவதிகாளக்கிச் சந்ததிகளைப் பெருகச் செய்வார்களாக.

இதன் தாத்பரியத்தினால் சுவாமிஜீயின் மனோபாவத்தை நல்லவிதமாய் எல்லோரும் அறிந்துகொள்ளும்படியான நமூனா ஈண்டுக் காணப்படுகின்றது: அஃதாவது, எருதுகளும் பசுக்களும் வரைதுறையில்லாது கண்டகண்டவிதமாய்க் கண்டகண்ட விடங்களிலெல்லாம் சேர்க்கை செய்வதேபோல் எவ்வகைப் பாகுபாடுமின்றி எந்தவிதமான வித்தியாசத்தையுங் கொள்ளாது, காட்டிலும் கரையிலும் வீட்டிலும் வெளியிலும் கொல்லையிலும் தெருவீதியிலும் பகிரங்கமாகவும் அந்தரங்கமாகவும் இன்னமும் மனம்போ போக்கின்படியும் சேர்க்கை செய்யலாம் என்பதே.

எனவே, எவ்வாற்றாலேனும் கூட்டுறவு நடத்திக் குட்டிகளைப் போட்டு உலகத்தை விருத்தி செய்தல் வேண்டும். அதிகமாயுண்டாகும் ஜனத் தொகையை இக்காலத்தில் அடக்கி வைக்க வேண்டுமென்று அறிஞர்களெல்லாரும் அதிக ஆவலுடன் ஆயாசப்பட்டு வருங்காலையில், இந்த யஜுர்வேத மந்திரத்தை எல்லோரும் அனுஷ்டிக்கும்படி ஆரியர்கள் தூண்டிவிட்டு ஜயம் பெறுவார்களாயின், அதி சீக்கிரத்தில் 22 கோடி ஹிந்துக்களும் 44 கோடியாக அபிவிருத்தியடைந்து, ஆங்கிலேயர்களின் அடிமைகளாய் இன்னும் நல்ல சவாரிக் குதிரைகளாக மாறிவிடலாம்.

எனவே, பிரிய நண்பர்காள்! சுவாமி தயானந்த்ஜீ தமது வேதங்களின்மீது இத்துணைப் பிரியம் வைத்துப் புகழ்ந்துகொள்வதும் அவற்றை ஆகாயம்வரை உயரக்கிளப்பிக் கொண்டாடுவதும் எமது பரிசுத்தத் திருமறையின்மீது ஆக்ரோஷமும் ஆவேசமும் வெறுப்பும் வேதனையும் கொண்டு திரிவதும் தக்க காரணத்தினால்தானென்று இப்பொழுது நன்கு தெரிந்துகொள்வீரகளாக. இப்படிப்பட்ட இனிய உபதேசங்கள் இஸ்லாமிய வேதத்தில் இல்லையென்னும் குறையினால்தான் வாயில் வந்தவாறெல்லாம் வைது, கையில் வந்தவாறெல்லாம் கழன்றுவிட்டு, சரஸ்வதி சாஹிப் நம் முஸ்லிம்களின் இருதயங்களையெல்லாம் இரு துண்டுகளாகப் பிளந்து வைத்திருக்கிறார்.

எந்த வேதத்தின் காரணத்தினால் பற்பலவிதமான இன்பச் சுவைகளெல்லாம் தமக்குக் கிட்டுகின்றனவோ, அந்த வேதத்தை எப்படிக் கெட்டதென்று அவர் கூறத் துணிவார்? இன்னமும் எப்பொழுது வேத பகவான் மனிதர்களின் மனத்திலுண்டான இச்சைகளனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளுதற்கு வேண்டிய மார்க்கங்கள யெல்லாம் தன் திவ்வியவாக்கில் அளித்தருளியிருக்கின்றாரோ, அப்பொழுதே அந்த வேதம் இவ்வுலகத்திலுண்டான சகல மதங்களின் வேதங்களைக் காட்டினும் ஆயிரமாயிரம் பங்கில் அதிக உயர்ந்ததாகவே காணப்படுமென்பதில் என்ன சந்தேகம்?

அவர்கள் ஆடுமாடுகளைப்போல் இருக்கிறார்கள்; இல்லை, இன்னும் கேடான துறையில் இருக்கிறார்கள்” (குர் 7:179) என்பதும் பொய்யாகுமென்றா நினைக்கின்றீர்கள்?

ஏ, என்னை அதிகம் நேசிக்கும்படியான மஹாப் பிரபூ! தாங்களே எனக்குச் சுகதுக்கங்களை அளிக்கின்றவரா யிருக்கின்றீர். தாங்களே என்னுடைய சகல துக்கங்களையும் நீக்குபவரா யிருக்கின்றீர்… தாங்கள் உடன் சேர்வதற்காக ஒரு நல்ல பெண்ணை ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவும், இன்பத்தைக் கொடுத்து இந்திரியத்தை இறைத்துக் குழந்தைகளை வளர்க்கக் கூடியவராகவும் இருக்கின்றீர். விதவாமணியான என்னுள் விந்து மணியை வார்ப்பீராக. ஏ, வீரியத்தைக் கொடுப்பவரே! ஏ, விந்தை இறைப்பவரே! ஏ, பிள்ளைகளைக் காப்பாற்றுபவரே! தங்களைச் சேர்ந்து விந்தை யடைந்து உறுதியான சுகமுள்ள பையனைப் பெறுவேன்” – (யஜுர், 8:10).

ஆஹா? என்ன பரிசுத்தமான புகழுக்குரிய, பரிசுத்தமான படிப்பினையாய் இது விளங்கா நிற்கின்றது! இதனாலல்லவோ ஆரிய வேதங்களுக்கு உலகத்திலில்லாப் பெருங்கீர்த்தி வாய்த்திருக்கின்றது? இவ்விதமான அதமகுணம் குடிகொண்ட ஆபாஸ அவமொழிகள் எமது குர்ஆன் ஷரீபில் இல்லாமற் செய்ததற்கு நாம் சர்வலோக சரண்யனாகிய சாக்ஷாத் எம் பிரானுக்கு அதிகம் நன்றி செலுத்த மிகவும் கடமைப்பட்டிருக்கின்றோ மன்றோ?

ஏ, எஜமானே! தங்களை விவாக சட்டங்களின்படி ஒப்புக்கொண்டிருக்கிறேன். தாங்கள் அதிக இன்பத்தை அளிக்கக்கூடியவர்களா யிருக்கின்றீர்கள். நான் தங்களுக்கு வேளைப் பிரகாரம் மனதைச் சந்தோஷிக்கச் செய்யும் சமையல்களைச் செய்து தருகிறேன்… உங்களுக்கு நான் கல்விமான்களின் சேர்க்கையை அனுமதித்திருப்பதேபோல் தாங்களும் எனக்கு அனுமதியளிப்பீர்களாக” – (யஜுர், 8:8).

ஏன் அனுமதி யளிக்கமாட்டார்? இதுதான் ஆரிய “நியோக”த்தின் அசல் கருத்தாயிருக்கிறதே! புருஷர்களுக்குக் கல்விமான்களின் சேர்க்கை கட்டாயம் இருக்க வேண்டுவது அவசியந்தான். ஏனெனின், வேதங்களில் கூறியவண்ணம் வேதாத்தியயனம் செய்தவர்களிடத்திலிருந்துதான் இதைக் கற்றுக்கொள்ளுதல் சாலும். ஸம்ஸ்கிருத வேதங்கள் வெளிப்பட்டு இற்றைநாள் பரியந்தம் ஒருவரும் நம் மஹரிஷி தயானந்த சரஸ்வதியைப்போல் அத்துணை ஆரிய கலாஞானம் நிரம்பப்பெற்றவராய் இருந்திராததனால்தான் இப்பொழுது சென்ற நூற்றாண்டில் இவர் தோன்றி எல்லோருக்கும் நியோகப் புனருத்தாரணமென்னும் நவநாகரிகத்தை நிலைநிறுத்திவிட்டுச் சென்றார். எனவே, அப்படிப்பட்ட ஸம்ஸ்கிருத சரஸ்வதிகளை விட்டுவிட்டு வேறு யாரிடம் சென்று வேதங்களின் கருத்தை உள்ளபடி உணருதல் முடியும்? அது முடியாது! முடியாது!! ஒருபோதும் முடியாது!!!

(தொடரும்)

-பா. தாவூத்ஷா

Image courtesy: swamirara.com


* “ஒரு யாகத்தில் வாஸ்தவமாகப் பலியிடப்படுகிற பலிகளின் மாம்சம் அந்தப் பலியிடுகிற பேர்களால் தின்னப்பட வேண்டுமென்று வேத வியாக்கியானிகளுள் ஒருவர் நியாயம் சொல்லியிருக்கிறார்.” எனவே, நரமேதம் செய்வோர் மனுஷ மாம்சத்தையே தின்றிருக்கிறார்களென்பது மிக்க வெளிப்படையாய்க் காணப்படுகின்றதன்றோ? கபீர்.


<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment