ண்பரின் FB பதிவு என் உரையாடலுக்கு ஒரு வாய்ப்பை அளித்து, புலம்பித் தள்ளிவிட்டேன்.

Social media, especially FB நாம் அறியாமல் நமக்கு போதையைப் புகட்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம்மை ஒரு top personality-யாக, ‘அப்பாடக்கராக’, விமர்சன ஜாம்பவனாக நாமறியாமலேயே நினைத்துக்கொள்ளத் தொடங்குகிறோம்.

5000 நட்புகளை எட்டியதும் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று அதற்கான FB status-களைப் பார்க்கிறேன். புது நட்புகளின் request accept பண்ண இயலாத நிலையில், இப்படியான ‘களையெடுப்பு’ statusகளையும் பார்க்கிறேன்.

நமது பதிவுகளை எல்லோரும் வாசிக்க வேண்டும், கமெண்ட்ஸ் இட வேண்டும், குறைந்தபட்சம் கட்டை விரலை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று ஏங்க ஆரம்பித்து விடுகிறோம். சுற்றுமுற்றும் பார்த்தால் அடாசு statusகளுக்கு, பாடாவதி பதிவுகளுக்கு 400, 500 லைக்ஸ், நூற்றுக்கணக்கில் பின்னூட்டம் என்று தீபாவளி களேபரம்.

நாம் போடும் கருத்தாழமிக்க, மானிடப் பதர்களை ஞான விளக்காக மாற்றிவிடும் சாத்தியமிக்க. உன்னதப் பதிவுகளை ‘ச்சீ, போ’ என்று ஈ கூடத் தீண்டுவதில்லை.

எனும்போது,

சுய பச்சாதபம், விரக்தி, நட்புப் பட்டியலில் உள்ளவர்கள்மீது கோபம் என்று கலந்துகட்டி நம் மனத்துள் பொளேர் என்று ஹோலி கலவைச் சாயம்.

அச்சமயம் பிறரிடம் வருத்தம் ஏற்படுகிறதே தவிர, நமது நட்புப் பட்டியலில் உள்ளோரின் எத்தனை பேரின் பதிவுகளை என்ன மெனக்கெட்டுப் படிக்கிறோம், லைக் இடுகிறோம், கமெண்ட்ஸ் இடுகிறோம் என்று நாம் யோசிப்பதில்லை. ஏனெனில்,

அவரவர்க்கு தினசரி கிடைக்கும் அரை மணி நேரம் அல்லது இருபத்தைந்தரை மணி நேரத்தைப் பொறுத்து FBயுடன் குலாவல், லவ்வு, சர்ச்சை, அக்கப்போர், கும்மாங்குத்து நடத்துகிறோம். அவற்றை, நமது அலைச்சலை, திரிதலை, ஜொள்ளைக் கவனித்து நமது ருசியைத் தீர்மானிக்கிறது, கலிஃபோர்னியாவில் உட்கார்ந்துகொண்டு FB ஜிகனா பக்கங்களுக்குப் பின்னால் ஒளிந்துள்ள தர்க்கத்தை வடித்தவனின் மென்பொருள்.

அது indirect ஆக நமது செயல்பாட்டை நிர்ணயித்து, நமக்குக் காட்டுவதைத் தட்டுகிறோம், நுழைகிறோம், virtual பேரானந்தக் கடலில் மூழ்கி எழுகிறோம்.

இறுதியில் பார்த்தால், ரத்தமும் சதையும் அதனுள் ஆன்மாவுமாக நடமாடும் சக ஜீவன்களிடம் நம்முடைய உறவு, நட்புகளிடம் வாய் திறந்து, நாக்கைச் சுழற்றி, வார்த்தைகளைப் பொழிந்து நிகழ்த்தும் உரையாடல், கலந்துரையாடல்களெல்லாம் Intensive care unit-ற்கு நகர்ந்து கொண்டுள்ளன.

‘நிறுத்துய்யா, போதும். பழையன கழிதலும் புதியன புகுதலும் பாவமா?’ என்று அடிக்கவர வேண்டாம். இயற்கை உணவுகளைக் கழித்துக்கட்டி genetically modified தயாரிப்பு உணவுகள் நாவிற்குள் புகும்போது ருசி சுவையானதாக இருக்கலாம்.

பிறகல்லவா இருக்கிறது தலைவலியும் திருகுவலியும் புத்தம்புது நோய்களும்!

-நூருத்தீன்


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment