அல்ஹம்து லில்லாஹ்!
சகோ. நூருத்தீன் அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் எழுதிய ‘தோழியர்’ தொடர், நூல் வடிவம் பெற்றுக் கடந்த 22.8.2014இல் சென்னை எழும்பூரிலுள்ள ஃபாயிஸ் மஹாலில் அதன் வெளியீட்டு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை ஐமேக்ஸ் பள்ளி மாணவர் முஹாஜிருல் இஸ்லாம், தம் இனிமையான குரலில் இறைமறை வசனங்களை ஓதி மாலை 7.15க்கு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். | ![]() |
சென்னை மாங்காடு, பெண்கள் நல அறக்கட்டளையின் தலைவி டாக்டர் ஆயிஷா அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலாவதாக, சத்தியமார்க்கம்.காம் நிறுவனர்களுள் ஒருவரான சகோ. முஹம்மது ரஃபீக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். | ![]() |
அடுத்து, அம்மாபட்டினம் அன்னை கதீஜா மளிர் கல்லூரியின் தாளாளர் பேரா. சயீதா பானு M.A., B.Ed அவர்கள் ‘தோழியர்’ நூலில் தம்மை ஈர்த்த சில வரலாற்று நிகழ்ச்சிகளை எடுத்துரைத்தார். | ![]() |
இரண்டாவதாக, ‘தோழியர்’ பற்றிய கவிதையொன்றை சத்தியமார்க்கம்.காம் உறுப்பினரும் கவிஞருமான சகோ. சபீர் அவர்கள் வாசித்தார். தோழியர் புதினத்தின் சுவையில் சோதனை காலத்தின் உயிர்த் தியாகம் போர்முனைக்கும் ஆண் எழுத்தாளரின் சஹாபியப் பெண்களின் தோழர்களுக்குச் |
![]() |
மூன்றாவதாகப் பேச வந்த, மனித உரிமைகளுக்கான மக்கள் கழக நிறுவத் தலைவர் பேரா. அ. மார்க்ஸ் அவர்கள், தாம் ஆய்ந்தளித்த மதிப்புரையில் இடம் பெற்ற தோழியர் குறித்து விளக்கவுரையாற்றினார். | ![]() |
சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நிறுவனர்களுள் ஒருவரும் தள நிர்வாகியுமான சகோ. முஹம்மது சர்தார் முதல் பிரதியைப் பன்னூலாசிரியர் அதிரை அஹ்மது அவர்களுக்கு வழங்கினார். | ![]() |
இரண்டாவது பிரதியை சத்தியமார்க்கம்.காம் தள நிறுவனர்களுள் ஒருவரும் கணினி வல்லுநருமான சகோ. முஹம்மது ரஃபீக் அவர்கள் வழங்க, பெண்கள் நல அறக்கட்டளையின் தலைவி டாக்டர் ஆயிஷா அப்துல் ஹமீது பெற்றுக்கொண்டார். | ![]() |
மூன்றாவது பிரதியை சத்தியமார்க்கம்.காம் தள ஆசிரியர் சகோ. ஜமீல் வழங்க, அன்று மாலை நூலாசிரியர் நூருத்தீனின் மகள் வஸீலாவை மணந்த புது மணமகன் முஹம்மத் ஹாரூன் பெற்றுக்கொண்டார். | ![]() |
நான்காவது பிரதியை சகோ. முஹம்மது சர்தார் வழங்க, அன்னை கதீஜா மகளிர் கல்லூரித் தாளாளர் பேரா. சயீதா பானு M.A., B.Ed. அவர்கள் பெற்றுக்கொண்டார். | ![]() |
ஐந்தாவது பிரதியைப் பேரா. அ.மார்க்ஸ் அவர்கள் ஊடகவியலாளர் சகோ. ஆளூர் ஷா நவாஸ் அவர்களுக்கு வழங்கினார். | ![]() |
இறுதியாக, நூலாசிரியர் நூருத்தீன் அவர்களின் சுருக்கமான ஏற்புரையை அடுத்து அமர்வுப் பிரார்த்தனையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. | ![]() |
நிகழ்ச்சி ஏற்பாடுகளை க்ராஃபிக் பார்க் நிறுவனர் சகோ. முஹம்மது ஸாதிக்கும் ‘டீக்கடை குழும’ உறுப்பினர்களுள் சிலரும் மிகச் சிறப்பாகச் செய்தனர். சத்தியமார்க்கம்.காம் தள ஆசிரியர் ஜமீல் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியிலும் விருந்திலும் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஆண்களும் பெண்களும் குடும்ப சகிதம் நிகழ்ச்சிக்குத் திரளாக வருகை தந்து கண்ணியப்படுத்தினர். அல்ஹம்து லில்லாஹ்! oOo |
|
தோழியர் நூல் கிடைக்குமிடங்கள்: Shajidha Book Center Aysha Publications Salamath Pathippagam Basharath Publishers Darussalam India தமிழகம் அமீரகம்
தகவல்: சத்தியமார்க்கம்.காம் |