அரிச்சுவடி

by நூருத்தீன்

கையால் எழுதிய கடிதமொன்று என் ஃபேஸ்புக்கில் ஒட்டப்பட்டிருந்தது. அது ஆரம்பிக்கிறது இப்படி –

அன்பு மகன் ராஜாவுக்கு,

 

தமிழில் நீ எனக்கு எழுதியிருந்த கடிதம் கால தாமதமில்லாமல் மின்னஞ்சலில் வந்து சேர்ந்தது. உன்னுடைய முதல் கடிதம், அதுவும் தமிழில் என்றதும் எனக்கு உற்சாகத்தில் தலை கூரையில் இடித்து காரை பெயர்ந்துவிட்டது. அதைப் பொருட்படுத்தாமல் படித்தால், பெரிய ஏமாற்றம். அதை உன்னிடம் சொல்லாமல் நான் ஏமாற்ற மாட்டேன்.

முதலில் உனது தமிழில் நிறைய எழுத்துப் பிழை. ammakku uthadu nalamillai என்று எழுதியிருக்கிறாய். ‘அம்மாக்கு’ இல்லை, ‘அம்மாவுக்கு.’ அடுத்து – உதடு உடல் சார்ந்த உறுப்புதான் என்றாலும் உதடும் உடலும் ஒன்றல்ல என்பதை நீ உணர வேண்டும்.

மின்னஞ்சலில் எழுதி அனுப்பினாலும் நல்ல எழுத்துரு தேர்ந்தெடுக்கக் கூடாதா? கோழி கிறுக்கியதைப் போலுள்ளது நீ எழுதியுள்ள font. ஒன்று செய். பேனா எடுத்து தாளில் எழுதிப் பழகு. சிலேட்டு, சிலேட்டுக் குச்சி அநாகரீகம் என்பதால் தாள் உகந்தது.

Oh shit! என்று அதிர வேண்டாம். கால மாற்றத்தில் தாள் பயனும் மாறத்தான் செய்யும்.

பயிற்சி செய்:
அ – அம்மா
ஆ – ஆடு

மற்றவை அடுத்த post-ல் என் வாலில் ஒட்டுவேன். வந்து பார்த்துக்கொள்.

அன்புடன்,
ராஜாப்பா

என்று படித்து முடிந்துவிடுகிறது. மடல்களுக்கு சாகித்ய அகாடெமி கிடையாதா?

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 28 ஏப்ரல் 2014 அன்று வெளியான கட்டுரை

அவ்வப்போது – தொடர் கட்டுரைகள்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

Related Articles

Leave a Comment