இமாம் அபூஹனீஃபா விமர்சனம் – சுஹைல்

by admin

கலோகத்தில் வாழ்ந்து சென்றோர் பலர். அதில் தடம் பதித்தோர் வெகு சிலரே. அப்படியான வெகு சிலரில் ஒருவர் தான் இமாம் அபூஹனீஃபா [ரஹிமஹுல்லாஹ்]. கல்வியைத் தேடித்தேடிப் பயின்று அதனை பிறருக்கும் கற்பித்து ஒரு ஞானவாழ்வு வாழ்ந்தவர் இமாம் அபூஹனீஃபா [ரஹிமஹுல்லாஹ்].

கடந்தகால வரலாற்றை நாம் அறிந்தால்தான் எதிர்காலத்திற்கு அந்த வரலாற்றை கடத்திச் செல்ல முடியும். அப்படியான வரலாற்று பக்கங்கள் சிலவற்றை எளிய தமிழில் தாங்கி இருக்கின்றது அண்ணன் நூருத்தீன் அவர்களின் ஞான முகில்கள் தொடர். தொடரின் முதல் பகுதியாக இமாம் அபூஹனீஃபா [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து சிலவற்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர் நிலவொளி பதிப்பகத்தார்.

“கசையடி” யில் தொடங்கி “மீண்டும் கசையடி” யில் இந்நூல் முடிவதால் இமாம் அபூஹனீஃபா [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் வாழ்க்கை ஒரு போராளியின் வாழ்வு என்பதனை வாசிப்போர் உணரலாம். தமிழுலகிற்கு இதுபோன்ற வரலாற்று ஆக்கங்களைத் தரும் அண்ணன் நூருத்தீன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

-சுஹைல் இப்னு அபீரய்யான்

Related Articles

Leave a Comment