‘விலா’வாரியாகப் பதிவுகளைப் போட்டுத்தாக்கும் பெண்ணுரிமைப் போராளிகள்; உன்னிஷ்டத்திற்கு மார்க்கத்தை ‘வளை’க்காதே என அவர்களிடம் எகிறுபவர்கள்; பரோட்டா சால்னாவுக்கு இன்னுமொரு நல்லி எலும்பு வேண்டும் என ஆசைப்படுவதைப்போல், கையில் மஹரும் வாயில் ஜொள்ளுமாய் அலைபவர்கள்; தொடப்பக்கட்டை பிஞ்சுடும் என்று ஓங்கிய வேக்யூம் கிளீனருடன் ரௌத்திரமுறும் அவர்களின் சக தர்மினிகள்; லேடீஸ்களுக்கெல்லாம் கத்னா செய்வீங்களாமே என அக்கறைப்படும் மகளிர்வதைப் பாதுகாவலர்கள்; இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு பேந்தப் பேந்த விழிப்பவர்கள்; அனைவரும் ஒருமுறையாவது இதை வாசித்துவிட்டால் தேவலை என்பேன்.
“Bent Rib”
அருமையாக எழுதியிருக்கிறார் Huda Khattab. 1990களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ் பெண்மணி இவர். நூலின் கருப்பொருள் ஓரவஞ்சனையின்றி அலசப்பட்டுள்ளது என்பதற்கு அவரது பின்னணி ஒரு சான்று. மட்டுமின்றி நூலின் மொழிநடையும் சரளம், தரம்.
எளிய, நூற்றுசொச்சம் பக்கமுள்ள ஆங்கில நூல். IIPH வெளியிடு. வாசிப்பதற்கும் reference-க்கும் உகந்த நூல் என்பது என் கருத்து. பரிந்துரைக்கிறேன் – பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்.
-நூருத்தீன்