மாற்றிச் சிந்திப்போம் என்று சொல்லிவிட்டு சரியான சிந்தனை. 63 பக்கங்களில் 8 அத்தியாயங்களுக்குள் நிறைய விஷயங்களை வேகவேகமாய்ச் சொல்லி கடந்து விடுகிறது புத்தகம்.
ஆனால் இதில் அடங்கியுள்ள கருத்துகளுள் விரிவான கட்டுரைகளுக்கான பல கரு அடங்கியுள்ளன என்பது ஆச்சரியம். அவை ஒவ்வொன்றையும் ஆழச் சிந்தித்து, உணர்ந்து, கவலைப்பட்டுவிட்டு, தூங்கலாம். விழித்து எழுந்தால் செயல்பாட்டுக்கான சாத்தியம் உண்டு.
அதட்டுவதற்கும் ஆக்ரோஷமாய் சண்டையிடுவதற்கும் சிலருக்கு வாய்ப்பளிக்கக்கூடிய செய்திகள் இதில் உள்ளதைக் கண்டு எனக்குச் சற்று அச்சம் ஏற்பட்டது. சகோ. CMN சலீமுக்கு என்னவொரு துணிச்சல்?
இன்றைய அரசுப் பள்ளிக் கூடங்களில் இருந்தோ, ஆங்கில வழிப்பள்ளிக் கூடங்களில் இருந்தோ அல்லது முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்லூரி, பல்கலைக்கழகங்களிலிருந்தோ ஒரு நாளும் இஸ்லாமிய அறிவு ஜீவிகள் உருவாக முடியாது
என்கிறார். மறுத்தால் அது மேம்போக்கு. ஜீவித்தனத்தை வெளியில் தேடி அலைந்து கொண்டிருக்கும் அனுபவஸ்தர்களுக்கு இதில் ஒளிந்துள்ள உண்மை பளிச்.
நிறுத்தி நிதானமாக வாசித்துப் பாருங்கள். இதில் அடங்கியுள்ள கவலைகளும் உண்மைகளும் புரியும்; எதை நோக்கி நகர வேண்டும் என்ற அனுமானம் கிடைக்கும்.
நம்மிடம் மாசுற்றுக் கிடக்கும் சிந்தனை மாறினாலன்றி தெளிவுக்கான வழி பிறக்காது. வித்திடுகிறது இந்த நூல்.
நூல்:
மாற்றிச் சிந்திப்போம்…!
விலை: ₹ 40
ஆசிரியர்:
CMN சலீம்
வெளியீடு:
சமூகநீதி அறக்கட்டளை பதிப்பகம்
129/64 தம்புச் செட்டித் தெரு,
மண்ணடி, சென்னை-600001
தொலைப்பேசி: 044 25225780
www.samooganeethi.org
-நூருத்தீன்