463
நூருத்தீன் எழுதிய மொழிமின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை புத்தகக் காட்சியில், நிலவொளி பதிப்பகத்தின் அரங்கு எண்:13-இல், 19/01/2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நிகழ்வுற்றது.
கீழை பதிப்பகம் முஸம்மில் முன்னிலையில் இந்நூலை வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஜனாப் S.N. சிக்கந்தர் வெளியிட்டார். ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் சென்னை மாநகர தலைவரும் BAPASI செயற்குழு உறுப்பினருமான ஜனாப் K. ஜலாலுதீன் பெற்றுக்கொண்டார். பின்னர் S.N. சிக்கந்தர் வாழ்த்துரை வழங்கினார்.