இரங்கூன் ஆசி

by admin

மிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு மார்க்க ஞானத்தையும் உலக வியவகார ஞானத்தையும் போதித்து அவர்களை முன்னேற்றமடையச் செய்த பெருமை சென்னை “தாருல் இஸ்லாம்” பத்திரிகாசிரியர் அல்ஹாஜ் பா. தாவூத்ஷா அவர்கட்கே உரித்தாகுமென்பதில் மிகை யொன்றுமில்லை.

தமிழ்ச் செல்வர் பா. தாவூத்ஷாவின் முயற்சியால் பள்ளியில் பயின்ற தமிழ் நாட்டு முஸ்லிம்களே இது போது அரசியல் ஆராய்ச்சியிலும் ஆத்மீக ஆராய்ச்சியிலும் தலை சிறந்து விளங்குவதாகக் காண்கின்றோம்.

பல இடையூறுகளால் அல்ஹாஜ் பா. தாவூத்ஷா அவர்கள தங்களுடைய “தாருல் இஸ்லாம்” பத்திரிகையை நிறுத்திவிட நேரிட்ட தென்பதைத் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் தெற்றெனத் தெரிந்தே யுள்ளனர்.

தமிழ் நாட்டு முஸ்லிம்களைத் தட்டி யெழுப்பிய அப்பத்திரிகை மறைந்த தினத்திலிருந்து தமிழ் நாட்டில் சிறந்ததொரு தமிழ் வெளியீடு இல்லா திருந்துவந்த தென்பதையும் எல்லோரும் அறிவோம்.

எனினும், தொண்டாற்றுவதையே தமது நித்தியப் பணியாகக் கொண்ட பா. தாவூத்ஷா மீண்டும் “தாருல் இஸ்லாத்”துக்குப் புத்துயிர் அளித்து, அதனை மாதமொரு முறையாக நம் கையில் வந்து மிளிர்ந்து எல்லாவகை ஞானமும் தந்து உதவுமாறு தோற்றுவித்திருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன்.

இஸ்லாமிய ஞானத்தையும் ஆசாரவொழுகத்தையும் அரசியல் ஞானத்தையும் முன்னர்க் கொடுத்துதவியது போலவே, இப்பொழுதும் தந்துதவி எல்லோரையும் ஞானவான்களாகச் செய்ய வேண்டியது.

அல்ஹாஜ் பா. தாவூத்ஷா அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய கிரந்தங்களிலிருந்து அவர்கள் எத்துணைத் தூரம் முஸ்லிம்கட்கும் இஸ்லாத்திற்கும் தொண்டு செய்திருக்கின்றார்கள் என்பதை நன்குணரலாம்.

தமிழ் நாட்டு முஸ்லிம்கள் முன்னர் ஆதரித்ததை விட இப்பொழுது அதிகமாய் ஆதரிக்க வேண்டியது கடமையாகும்.

“தாருல் இஸ்லாம்” என்றென்றும் நிரந்தர சஞ்சிகையாக நின்றிலங்கும்படி எல்லாம் வல்ல நாயன் நற்கிருபை செய்வானாக.

-ஹாஜீ சி. அ. முஹம்மது இஸ்மாயீல்
(இரங்கூன்)

Related Articles

Leave a Comment