விபச்சாரம்!

by admin

வாள் முனையைவிட பேனா முனை சக்தி வாய்ந்தது எனும் வசனமெல்லாம் இன்றைய ஊடக உலகில் மரணித்துப்போன உண்மை ஆகிவிட்டது. ஆமாமாம்… யார் இப்பொழுது

பேனா உபயோகிக்கிறார்கள்? கணினி, தொலைக்காட்சி, யூட்யூப் என்று பட்டியலிட ஆரம்பித்தால் அதுவல்ல செய்தி. சொல்லப்படும் செய்திகளின் யோக்கியதை.

ஊடக உலகம் வரிந்து கட்டிக்கொண்டு மக்களிடம் திணிக்கும் சங்கதிகளில் உண்மை குறைவானதாக இருந்தால்கூட தேவலாம்; நாராசமும் பொய்மையும் விதியாகிவிட்டன. பணம், துவேஷம், போட்டி, அரசியல் என்று அதற்கான காரணங்கள் நீள்கின்றன. தினமலர் பத்திரிகையின் போக்கை விபச்சாரத்துடன் ஒப்பிட்டு வெளியாகியுள்ள வக்கிர நாளிதழின் ஊடக விபச்சாரம்! எனும் கட்டுரை நிறைய கவலையை ஏற்படுத்துகிறது. மக்களின் மனப்போக்கை வடிவமைப்பதில் பத்திரிகைகளின் பங்கு பெரியது. அது மக்களை கேடுகெட்ட போக்கிற்கு இட்டுச் செல்வது எவ்வளவு பெரிய அநியாயம்?

முழுவதும் படித்துப் பாருங்கள்: http://www.satyamargam.com/news/news-and-views/2109-dinamalar-a-modern-media-prostitute.html

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment