தளிர் பதினைந்து விமர்சனம் – சையத் ஃபைரோஸ்

by admin

ளிர் பதினைந்து – 167 சுவையூட்டும் பக்கங்கள். ஆசிரியர் நூருத்தீன் அவர்கள் வேறு வேறு வயதில் எழுதிய 15 சிறுகதைகள். நவரசங்களின் சங்கமம். ஒவ்வொரு கதையும் ஓர் இரத்தினமாக, ஒரு வைரமாக, ஒரு முத்தாக, ஒரு மரகதமாக, ஒரு பவளமாக மிளிர்கிறது.

2020ல் எழுதியதற்கும் 1998ல் எழுதியதற்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை.

குடும்ப உறவுகள், நாட்டு நடப்புகள், பாசம் நேர்மை நாணயம் இவற்றின் முக்கியத்துவம், இஸ்லாமிய அழகிய போதனைகள் என்று ஒவ்வொரு கதையும் வேறு வேறு கதைக்களத்தில் நட்சத்திரங்களாக மின்னுகின்றன.

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் சில Science Fiction கதைகள். அவை நிகழும் காலகட்டம் 2030, 2050, 2096. பழம் பெரும் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதைகளை படிப்பது போன்ற பிரமை ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. எப்படி இப்படியெல்லாம் ஆசிரியர் நூருத்தீன் அவர்களால் think பண்ண முடிகிறது என்ற ஆச்சரியம் மேலோங்கி நிற்கிறது.

பேராச்சரியம் என்னவென்றால், ஒவ்வொரு கதையின் முடிவிலும் “நச்” என்று தலையில் அடித்தாற்போல ஒற்றை வரியில் சொல்லப்படும் சூசகமான அறிவுரைகள்!

Hats off to Noorudeen!

Baarak Allahu Laka (May Allah bless you)!

-சையத் ஃபைரோஸ்


அமேஸான் கிண்டிலில் இந்நூல் வெளியாகியுள்ளது.

India: https://www.amazon.in/dp/B08PHBKH93
USA: https://www.amazon.com/dp/B08PHBKH93

Related Articles

Leave a Comment