470
நான் என் மகனுடன் இணைந்து வாசித்த புத்தகம் ‘யார் இந்த தேவதை?’ நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் நபித் தோழர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தொகுத்து குழந்தைகளுக்கான நீதிக் கதைகளாக கொடுத்திருப்பது அருமை.
ஒவ்வொரு கதையிலும் உள்ள நற்கருத்துகளை நம் குழந்தைகளின் மனதில் பதிய வைத்தால் சமூகத்தின் சிறந்த மனிதர்களாக நாளை அவர்கள் விளங்குவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நூருத்தீன் அவர்களின் எழுத்து நடை மிகவும் எளிமையாக உள்ளது சிறப்பு. ஒவ்வொரு நாள் இரவும் “அம்மா யார் இந்த தேவதை கதை படிப்போம் வாங்க” என்று என் மகனின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது.
-ஜன்னத் ஜக்கரிய்யா