அய்யா,
வணக்கம். அறிஞர் பா,தா, அவர்களின் தமிழ் நடையில் மயங்கிய ஒரு ரசிகன் நான். எனக்கு வயது 64 ஆகிறது.
அவரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை – உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அவரின் நூல்களான
1. ஜவாஹிருல் ஃபுர்கான் (4 பாகங்கள்),
2. குர்ஆன் மஜீத் (7 பாகங்கள்),
3. (ஆயிரத்தோர்ரிரவு) அரபு நாட்டுக் கதைகள் (? பாகங்கள்),
4. ஆரியருக்கோர் வெடிகுண்டு,
5. முதற்கமலம்,
6. ஹிப்னாட்டிஸ மெஸ்மரிஸ மனோவசிய சாஸ்திரம். ………… முதலிய ஏராளமான நூல்கள் உள்ளன. அவற்றை மறுபதிப்பு செய்யுங்கள். அல்லது மறுபதிப்பு செய்ய விரும்புகிறவர்களுக்கு அனுமதி அளியுங்கள். அல்லது உங்களுக்கு என்று ஒரு வளைதளத்தை வைத்துள்ளீர்கள். அதிலாவது அவற்றை வெளியிடுங்கள்.
எப்படியாவது அவரின் பெயர் மக்கள் மத்தியில் பல நூறு ஆண்டுகள் நின்று நிலவவேண்டும். செய்வீர்களா?
அன்புடன்,
‘பழங்காசு’ ப.சீனிவாசன்
22-06-2014