அருளாளனும் அன்புடையோனு மாகிய அல்லா(ஹ்)வின் திருநாமத்தைக் கொண்டு (ஆரம்பம் செய்கிறோம்).

“இன்னம், (மன்பதைகளை) நன்மையின் பக்கல் அழைத்தும், நல்லதைக் கொண்டு ஏவியும், தீயதை விட்டு விலக்கியும் வரகின்ற ஒரு கூட்டத்தினர் உங்களுக்குள்ளே இருக்கக் கடவர்; இன்னம், அன்னவர்களே ஜயசீலர்க ளாவார்கள்.” –(குர்ஆன் 3:103)

இத் திருவாக்கியத்தில், முஸ்லிம்களில் ஒரு பிரசாரக் கூட்டத்தினர் இருக்கவேண்டு மென்றும், இவர்கள் மனிதர்களை நன்மையின் பக்கமே அழைக்க வேண்டு மென்றும், அவர்களை நல்லது செய்ய ஏவ வேண்டு மென்றும் தீயதை விட்டு விலக்கி வைக்க வேண்டு மென்றும் கூறப்பட் டிருக்கிறது. ஏனையெந்த வேதத்திலும் இல்லாத விசேஷமா யிருக்கிறது, இவ்வாறு பிரசார கோஷ்டி யொன்று இருக்க வேண்டு மென்று எமது திருமறை இவ்வாயத்திலே எடுத்தோதி யிருப்பது. எனவே, இவ்வாறு இஸ்லாமிய பிரசாரம் புரிவதென்பது இந்தக் கோஷ்டியாரின் முக்கிய நோக்கமா யிருந்து வருகின்றது.

இஸ்லாமிய பிரசாரம் புரிவ தென்பது, வெறும் ஜனக்கணித மதிப்பிற்காக ஆட்களை எண்ணிக்கையில் பெருக்குவதாக மட்டுமே ஆகாது. ஆயின், மக்களை நன்மையின்பால் திருப்பித் திருத்தி யமைத்தல் வேண்டும்; அவர்களை நல்லதையே புரியுமாறு ஏவ வேண்டும்; தீயதை விட்டுத் திரப்பி விலக்க வேண்டும். பல மனிதர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள்; ஆனால், ஏனையவர்பாலுள்ள குற்றங்குறைகளைத் திருத்தத் தைரியங் கொள்ளார். ஆனால், நபிமார்கள் மீக்கூறிய குர்ஆன் ஆயத்தில் கூறப்பட்டுள்ள வண்ணமே செய்து முடிப்பார்கள்; எவருடைய விருப்பையேனும் வெறுப்பையேனும் பொருட்படுத்த மாட்டார்கள். அப்பெம்மான்களைப் பின்பற்றி நடக்கும் மெய்யான மூமின்கள் ஏனை மக்களின் விழைவையும் வெறுப்பையும் சிறிதும் கருதார்கள்.

மேற் கூறிய ஆயத்தில் கூறப்பட்டுள்ள வண்ணம் “இஷா அத்” செய்தால் மட்டுமே முஸ்லிம்க ளெல்லாம் உண்மை முஸ்லிம்களா யிருப்பார்கள். உண்மை முஸ்லிம்கள் அல்லா(ஹ்)வும் அவனுடைய திருத்தூதரும் கூறிய வண்ணம் ஒழுகி வருவர். இப்படிப் பட்டவர்களே ‘சத்ய’ சன்மார்க்கத்தில் செவ்விதாய் நடந்து, ஏனை மக்களையும் அவ்வாறு செவ்விய சன்மார்க்கத்திலே நடக்கத் தூண்டுவர்.

எனவே, பாக்கிஸ்தான் – “பரிசுத்தஸ்தானம்” – என்பது எவருக்கு உரித்தென்பது அடுத்துள்ள வினாவாகும். பாக்கிஸ்தான் என்பது பரிசுத்த முஸ்லிம்களுக்கே உரிய அரசாங்கமாகும்; பரிசுத்த முஸ்லிம்கள் என்பவர்கள் அல்லா(ஹ்)வும், அவனுடைய ரஸூலும் ஏவிய வண்ணம் நடப்போரேயாவர். எனவே, இத்தகைய மூமின்களே, முஸ்லிம்களே அந்தப் பாக்கிஸ்தானுக்கு அருகதையுள்ளவர்களா யிருக்கிறார்கள். ஆதலால் பெயரளவில் “முஸ்லிம்கள்” என்று கூறிக்கொண்டு, அல்லது நடித்துக்கொண்டு திரிபவர் எவ்வாறு அந்தப் பாக்கிஸ்தானுக்கு லாயிக்குள்ளவராயிருப்பர்? அல்லது அந்தப் பாக்கிஸ்தான்தான் இப்படிப்பட்ட முஸ்லிமல்லாத “முஸ்லிம்க”ளென்பாரகளுக்கு எவ்வாறு நன்மை பயப்பது சாலும்?

எனவே, பாக்கிஸ்தான் ஜிந்தாபாதாக இருக்கவேண்டுமாயின், நா மனைவரும் குர்ஆன்ஷரீபிலும் ஹதீது ஷரீபிலும் வர்ணிக்கப்பட்டுள்ள வண்ணம் மெய்யான முஸ்லிம்களா யிருத்தல் வேண்டும். மெய்யான முஸ்லிம்கள் தங்கள் நண்பர்களையும் பந்துக்களையும் நல்லதைக் கொண்டு ஏவி, தீயதைவிட்டு விலக்கி, நன்மையின் பாலே அழைத்தும் தாங்களும் அவ்வாறே ஒழுகியும் வருதல் வேண்டும். அப்பொழுதான் நாமும் “பாக்”காக இருப்போம்; நமது பாக்கிஸ்தானும் ஜிந்தாபாதாயிருக்கும். ஆகையால், எம் முஸ்லிம்காள்! குர்ஆன்ஷரீபின் பக்கலே வாருங்கள்! ஹதீதுஷரீபின் பக்கலே வாருங்கள்!!

“உங்களுக்கு நான் இரண்டு வஸ்துக்களை விட்டுச் செல்லுகிறேன்; அவற்றினை நீங்கள் பற்றிப் பிடித்திருக்கு மட்டும் வழி தவறிப்போக மாட்டீர்கள்; ஒன்று, அல்லாஹுத்தஆலாவின் திரு வேதம்; இரண்டு. அவனுடைய தூதரால் சொல்லப்பட்ட சட்ட திட்டங்கள்.” (நபிகள் நாயக வாக்கியம்)

தாவூத்ஷா

நபிகள் நாயக மான்மியம்

நெடு நாட்களாக வெகு ஆர்வத்துடன் எதிர் பார்க்கப்பட்டு வந்த ந. நா. மான்மியம் இது காலை முழுவதும் அச்சுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. இம் மாபெருங்கிரந்தம் இரண்டு பாகங்களாக வெளி வரும். முதல் பாகத்தில் 29 அதிகாரங்கள் இருக்கும். சீக்கிரம் இது விற்பனைக்கு வந்து விடும். பெரிய கிரந்தம்; அழகிய அச்சு. 500 அல்லது 600 பக்கங்களாகலாம். காகிதப் பஞ்சத்தால் சொறபப் பிரதிகளே அச்சாகின்றன. முந்திக் கொள்பவருக்கே இது கிடைக்கும். இப்பொழுதே தேவைக்கு எழுதிப் திவு செய்துகொள்ளுங்கள்!

ஷாஜஹான் புக் டெப்போ
30, சாந்தோம், சென்னை 4.


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947
பக்கம் : 1, 8

Related Articles

Leave a Comment