உன்னதமானவர்களுடன் ஒரு பயணம்

by admin

ன்னடா வாழ்க்கை இது? ஒரு நிமிடம் கூட நிம்மதி இல்லையே! வாழ்வதற்காக இப்படி ஓட வேண்டியுள்ளதே! எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏமாற்று, வஞ்சகம், துரோகம், நம்பிக்கை மோசடி! குடும்பம், நட்பு, உறவு, சமுதாயம் என அனைவரும் அனைத்தும் மோசம்! அன்பு, சகோதரத்துவம், நம்பிக்கை என எதற்கும் மதிப்பில்லை! காசு-பணம், பொருளாதாரத் தேவை என வரும்போது சுயநலத்தின் உச்சம். மரியாதை, கட்டுப்பாடு என்பதெல்லாம் மலையேறிவிட்டது. வயது வித்தியாசம் பார்ப்பதில்லை; யாரும் யாரையும் மதிப்பதில்லை.

எதற்கடா இப்படியான சமூகத்தில் வாழ வேண்டுமென்ற அளவுக்கு விரக்தியின் எல்லையில் இருக்கும் சமூக நல ஆர்வலர்களா நீங்கள்?

நோய், வேலையில்லை, தொழில் நஷ்டம், கணவன் – மனைவி பிரச்சினை, பிள்ளைகள் கட்டுப்பாட்டில் இல்லை; என்ன செய்வதெனத் தெரியவில்லை; எதற்காக நாம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமென பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தத்தின் உச்சத்தில் இருக்கும் பெற்றோர்களா நீங்கள்?

படிப்பு தலையில் ஏறவில்லை; எவ்வளவு படித்தாலும் மண்டையில் நிற்கவில்லை; ஆமாம் பெரிய பொல்லாத படிப்பு; அதைப் படித்து என்னவாக ஆகிவிடப் போகிறோம்? எதற்காக நான் படிக்க வேண்டும்? என வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாமல் ஏனோ தானோவென இருக்கும் மாணவர்களா, பொறுப்பிலாமல் சுற்றும் இளைஞர்களா நீங்கள்?

அனைவருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உள்ளது. அதனை அவரவரே கண்டடைவதற்கான அற்புதமானதொரு திறவுகோல் – இரண்டு நூல்கள்.

புனித ரமளான் மாதத்தில் மன நிறைவோடு, நேரத்தைப் பயனோடு கழிப்பதற்கு என் பரிந்துரை:

  • தோழர்கள்
  • தோழியர்

சகோதரர் நூருத்தீனின் எழுத்தில், சத்தியமார்க்கம்.காம் (www.satyamargam.com) இணையதளத்தில் தொடராக வலம் வந்தவர்கள் தற்போது நூல் வடிவம் பெற்று நம் கைகளில் தவழ்கிறார்கள்.

வெறுப்புகளும் கோபங்களும் அகன்று மனங்கள் இலேசாகி, கசிந்துருகி, இப்படியும் மனிதர்களால் வாழ முடியுமா என்ற கேள்விக்கு நம்மை உட்படுத்தி, நம்மை நாமே திரும்பிப் பார்க்க வைத்து, நம் வாழ்வின் இலட்சியம் என்னவாக இருக்க வேண்டுமென சுயபரிசோதனைக்கு நம்மை ஆளாக்கி, நம்மைப் புடம்போட வைக்கும் அற்புதப் பேழைகள் இந்த நூல்கள்!

ஒவ்வொரு பள்ளிவாசலிலும் நூலகத்திலும் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய அமுதம்!

ஒரு முறையாவது வாசித்துப் பாருங்கள். சகோதரர் நூருத்தீனின் கவர்ந்திழுக்கும் வசீகர எழுத்து நடையில் தோழர்களாக, தோழிகளாக சுவாசிப்பீர்கள்.

வாருங்கள், அந்த உன்னமாதவர்களுடன் ஒரு நாளாவது வாழ்ந்து வருவோம்!

-அப்துர்ரஹ்மான் (அபூசுமையா)

நூல்கள் வாங்க:
https://www.commonfolks.in/books/d/thozhargal-muzhu-thoguppu
https://www.commonfolks.in/books/d/thozhiyar-seermai

Related Articles

Leave a Comment