1. குர்ஆனின் மேற்கோள்கள் காண்பிக்கப் படுகிற இடங்களில் ஈர் எண்கள் (உதாரணமாக, 28:4 போன்றவை) குறிப்பிடப்படும். இவற்றுள் முதல் எண் அத்தியாயத்தின் எண்ணையும், அடுத்தது அதிலுள்ள ஆயத்தின் எண்ணையும் குறிக்கும். (அஃதாவது, 28-ஆவது அத்தியாயம், 4-ஆவது ஆயத் என்று கொள்க).
2. பின்வரும் சுருக் கெழுத்துக்களின் விரிவு இவை யாகும்:—
அ.கு. — அடிக் குறிப்பு.
அத்தி. — அத்தியாயம்.
அ.தா. — அபூ’ தா’வூத’’ (ஹதீது).
இ.அ. — அ’ப்’து’ல்’லாஹ் இப்’னு அ’ப்’பா’ஸ்.
இ.க. — இப்னு க:தீர் (த‘ப்ஸீர்).
இத். — இத்:கான் ‘பீ உ’லூமுல் குர்ஆன் (தப்ஸீர்).
இ. ம. — இப்னு மஸ்ஊ’த்’.
இ மா. — இப்னு மாஜா (ஹதீது).
இ.ரா. — இமாம் ரா‘ஜீ (தப்ஸீர் கபீர்).
இ.ஜ. — இப்னு ஜரீர் (தப்ஸீர்).
இ.ஹி. — இப்னு ஹிஷாம் (சரித்திரம்).
க.உ. — கன்‘ஜூல் உ’ம்மால் (ஹதீது).
கத். — :கதாதா’ இப்னு து’ஆ’மா.
கஷ். — கஷ்ஷா‘ப் (தப்ஸீர்).
ச. முஸ். — ச‘ஹீ‘ஹ் முஸ்லிம் (ஹதீது).
தா. அ. — தாஜுல் அ’ரூஸ் (அகராதி).
திர் — திர்மிதீ (ஹதீது).
நஸ. — சுனனுல் நஸாஈ (ஹதீது).
நிஹா. — அன் நிஹாயா (ஹதீது).
ப. பா. — ‘பத்‘ஹுல்பா’ரீ (புகாரீ வியாக்கியானம்).
ப. மு. — ப’‘ஹ்ருல் மு‘ஹீத் (தப்ஸீர்).
பய். — ப’ய்லா’வீ (தப்ஸீர்).
புகா. — ச’ஹீஹ் பு’காரீ (ஹதீது).
மிஷ். — மிஷ்காத்துல் மஸாபீ‘ஹ் (ஹதீது).
மு.றா. — மு‘ப்ரதா’த் றா‘கிப்’ (குர்ஆன் அகராதி).
முஸ். — முஸ்னத்’ – இமாம் அஹ்ம திப்னு ஹன்பல் திரட்டிய ஹதீது.
மௌ.மு. — லாகூர் மௌலானா முஹம்மதலீ (குர்ஆன் ஆங்கில உரையாசிரியர்).
ரூ. ம. — ரூ ‘ஹுல் மஆ’னீ (தப்ஸீர்).
லி. அ. — லிஸானுல் அ’ரப்’ – (அகராதி).
ஜலா. — அல் ஜலாலைன் (தப்ஸீர்).
ஜா. ப. — ஜாமிஉ’ல் ப’யான் (தப்ஸீர்).
ஹி. ப. — ஹிந்துமதமும் அதன் பகுத்தறிவுத் திறனும்.
3. குர்ஆனில் அரப் வாக்கியங்களின் கடைச் சொற்கள் எதுகையாய் அமைந்திருக்கும். இந்த எதுகை நயம் நோக்கியே ஆயாக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டின் வழக்கப்படியும், கூபா வாசிகளின் கணக்குப்படியும், அந்த நயத்தை அடிப்படையாய்க் கொண்டு இப்பதிப்பில் ஆயாத்கள் அமைந்துள்ளன. “பிஸ்மில்லாஹ்” என்னும் காப்பு வாசகம் இலக்கமிடப்பட வில்லை. இதைக் கவனிக்க.
4. நின்ற நிலையிலோ, ஓடுகிற ஓட்டத்திலோ, கண்ணோரிடம் கருத்தோரிடம் என்ற கதியிலோ குர்ஆனை ஓதுவதோ, பொரு ளறிவதோ அறவே தகாது. ஒவ்வொன்றையும் நிதானமாக ஓதி, படித்து, சிந்தித்து உணர்வதற்காக வென்றே சிறு எழுத்துக்களில் உரைகளை நீளமாக அச்சியற்றி யிருக்கின்றோம். எனவே, கவனித்து மெதுவாகப் பயிலுங்கள்.
5. இதில் வரும் அரப் எழுத்துப் பகுதியான மூலம், பிழையறப் பரிசோதிக்கப்பட்டே தயாராகி யுள்ளது. எனினும், அச்சு வாகனத்தில் அது ஓடுகிற வேகத்தில் எங்கேனும் புள்ளிகளோ, உயிர்க் குறி, மெய்க் குறியீடுகளோ நலிந்துவிட் டிருக்கலாம்; உதிர்ந்துபோ யிருக்கலாம்; அல்லது அழுந்திப் போயும் இருக்கக்கூடும். எனவே, ஓதும் பொழுது ஏதும் இப்படிப்பட்ட குறை தென்பட்டால், தயவு செய்து திருத்திக் கொள்க. எமக்கும் எழுதுங்கள்.
6. இறைவனின் திருவாக்கியங்கள் அச்சிடப் பெற்றுள்ள இந்த ஏடுகள் பரிசுத்த மானவை. எனவே, இந்நூலை அசுத்தம்படிந்த இடங்களில் கிடத்தாட்ட வேண்டாம்; சிறு குழந்தைகளின் கைக்கு எட்டும் உயரத்திலும் வைக்க வேண்டாம்.
7. குர்ஆனில் என்ன கருத்துக்கள் செறிந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ள ஆர்வ மிக்கோர்க்கே இது அர்ப்பணம். எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்க நடையிலே இதை அமைத்துள்ளோம். அப்படியும் எங்கும் ஏதும் புரியா விட்டால், மறுமுறையும் ஊன்றிப் படித்துப் பொருளுணர்க.
8. அரப் மொழியில் மொத்தம் 29 எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள், அ, த, ஜ, ர, ஸ, ஷ, க, ல, ம, ந, வ, ஹ, ய என்னும் 13 எழுத்துக்களின் உச்சரிப்புக்களை மட்டுமே தமிழில் அப்படியே எழுத இயலும். மற்ற 16 எழுத்துக்களை அவ்வாறு வரைந்து காட்ட வழியில்லை. எனவே, அரப் லிபியில் 2-ஆவதான பே’, 4-ஆவதான தே, 6-ஆவதான ‘ஹயெ, 7-ஆவதான க’யெ, 8- ஆவதான தா’ல், 9-ஆவதான ‘தால், 11-ஆவதான ‘ஜே, 14-ஆவதான ஸ்’வாத்’, 15-ஆவதான ல்’ வாத்’, 16-ஆவதான ‘த்ஓயெ, 17-ஆவதான ள்’ஒயெ, 18-ஆவதான அ’ய்ன், 19-ஆவதான ‘கய்ன், 20-ஆவதான ‘பே, 21-ஆவதான :கா‘ப், 28-ஆவதான ஹம்‘ஜாவின் ‘அ; ‘உ முதலியவை இங்குக் காண்பிக்கப்பட்டுள்ள வாறு அடையாள மிடப்பட்டுள்ளன. அழுத்தி உச்சரிக்கப்படும் த என்னும் தமிழெழுத்து, சொல்லின் இடையில் வந்தால் (மனிதன் என்பது மாதிரி) மெல்லோசை பெறுகிற தல்லவா? அரபில் அப்படி யில்லை. எனவே, அப்படிப்பட்ட இடங்களில் த என்கிற எழுத்து அழுத்தமாக உச்சரிக்கப்பட வேண்டு மாகையால், ‘த என்று குறிப்பிடுவோம். எதற்கும், அரப் மூலத்திலுள்ள சொல்லுடன் ஒப்பு நோக்கி, அங்கங்கேயும் திருத்தமாகப் படித்துக் கொள்க.