அல் பகறா – பசு
(சூறா மதனீ : பிரிவு 40; திருவாக்கியம் 286)
தோற்றுவாய் :
அரப் மொழியில் ப’ :கறா என்னும் சொல் ‘மாடு’ என்று அர்த்தப்படும். காளையாயினும் பசுவாயினும் அது பகறா என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த அத்தி. க்கு இடப்பட்டிருக்கும் பெயர் ஆண்பாலைக் குறிக்கிறதா? அல்லது பெண்பாலைக் குறிக்கிறதா? என்பதை நன்றாய் நோட்டமிடல் வேண்டும். இந்த அத்தி யின் ஆயாத் 67 முதல் 71 வரை வருணிக்கப்பட்டுள்ள ஒரு பசுவின் வதை சம்பந்தமான கதையிலிருந்து, இங்கே பகறா வென்பது பசுவைத்தான் குறிக்கிற தென்பது நன்கு புலனாகும். குர் ஆன் ஷரீபின் எல்லா அத்தி களுமே. அந்த அந்த அத்தி.யி லுள்ள ஒரு விசேஷமான, வியப்பூட்டுகிற சொல்லைத் தலைப்பாகக் கொண் டிருப்பதை யொட்டி. இதுவும் அவ்வாறு பெயரிடப்பட் டிருக்கிறது. இந்த அத்தி. சம்பந்தப்பட்ட மட்டில். மூஸாவின் (அலை) காலத்து யூதர்கள் புரிந்த பசுவின் பூஜையையும், அந்த விலங்கின் உருவவழிபாட்டையும் சுட்டிக்காட்டி நேர்வழியை நன்கு துலக்கி வருவதால், இவ்வாறு ‘பசு’- (பகறா) என்று பெயரிடப்பட்டிருப்பதாக அனேக அறிஞர் அறைகின்றனர்.
முன் சென்ற முதல் அத்தியாயத்தை “முகவுரை” என்று கொள்வோ மானால், இந்த இரண்டாவது அத்தி.யே குர் ஆனின் முதல் அத்தியாயமாய் நிற்கு மென்பது செவ்வன் புலனாகும். இது பெரும்பாலும் யூதர்களைப் பற்றியும், அவர்கள் இஸ்லாத்துக்கு எதிராகக் கிளப்பும் ஆட்சேபங்கள். விஷமத்தனங்கள் முதலியவற்றைப் பற்றியும் விவரித் துரைக்கிறது. இங்கிலீஷ் நவ்முஸ்லிமும். குர் ஆனை ஆங்கிலத்தில் அழ காக மொழிபெயர்த் துள்ளவரு மாகிய மார்மடி யூக் பிக்தால் இந்த அத்தி. சம்பந்தமான முன்னுரையில் இவ் வாறு கூறுகிறார் : மதீனா என்னும் யதுரிப் நகரில் யூதர்கள் பலங்குன்றி ஒடுங்கிக் கிடந்த போதினும், அக் கால அஞ்ஞான அரப் மக்களை விடக் கற்றோராகவும், ஞானவான்களாகவும் யூதகுல ஆசார்ய புருஷர்கள் – (றப் பீ’கள் ) விளங்கிய காரணத்தால், பின்னே ஒரு மகா தீர்க்கதரிசி அரப் நாட்டிலே தோன்றப் போகிறார் என்பதை அவர்களே முன்னறிவிப்பாகத் தங்கள் ஆகமங்களிலிருந்து எடுத்துக் காட்டிவந்தார்கள் : முஹம் மத் (சல்) நபிப்பட்டம் அருளப்பெற்று மக்காவில் ஆதியில் ஏகதெய்வ வணக்கப் பிரசாரம் புரிந்துவந்த காலக் தில் யது ரிபிலிருந்து மக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த அஞ்ஞான அரபிகள் தாங்கள் றப்பிகளின் வாய் மூலம் கேள்விப்பட்டிருந்த எதிர்கால மாநபி அம்மகானே என்பதை ஐயமறத் தெளிந்து கொண்டார்கள். எனி னும், மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நபி நிதரிசனமாகத் தோன்றிவிட்டாரே என்று மகிழ்ச்சியடன் அம் மகானை ஏற்க அந்த யூதர்கள் முற்பட்டன ரில்லை. ”யூதர்கள் அந்த (வரப்போகும் ) நபியைப் பற்றி அவர் தங்களிடையே தோன்றி. தங்களுக்கென்றே பிரத்தியேகமாக (மூஸாவைப் போல்) ஒரு நிலப்பரப்பை யம் அதன் ஆட்சியதிகாரத்தையும் தங்கள் வயம் மட்டுமே ஒப்படைப்பா ரென்று எதிர்பார்த்த துடனே இஸ்லாத்தை ஏற்க முற்படும் ஒவ்வோர் அஞ்ஞானியான அரபியையும் தங்களுடன் சரிசமத்துவமாக ஆக்கி உயர்த்திவிட மாட்டார் என்றும் நம்பினார்கள். தாங்கள் எதிர்பார்த்தவகையில் அப் புதுத் தீர்க்கதரிசியைப் பயன்படுத்திக் கொள்ள முடியா தென்பதைத் தெரிந்து கொண்டதும் அவர்கள் அவரை எதிர்க்க முற்பட்டு கங்கள் வேதாகமக் கோட்பாடுகளை யெல்லாம் அவர்மீது வினாக்களாகக் கொட்டிக் கவிழ்த்துக் குழப்பிவிடப் பார்த்தார்கள். அவரினும் தங்களுக்கே மேலான ஞான நிறைவு உண்டென்னும் இறுமாப்பால் இப்படிச் செய்தார்கள்,” என்பது அவர் கூற்று.
அல்லாஹ்வின் நபியொருவரின் முன்னே குதர்க்கம் பேசினால், நற்பயன் விளையா தென்பதை அந்க எ ஹூதிகள் உணரவில்லை. அவர்கள் புரிந்த விஷமங்க ளெல்லாம் குர் ஆன் வாயிலாக அம்பலத்துக்க வந்துவிட்டதுடன், அல்லாஹ்வின் நல்ல பிள்ளைகள் என்னும் இறுமாப்புடன் அவர்கள் சீர்கெட்டுப் பரிக்க குரங்கு சேஷ்டைகள் முற்றுப்புள்ளி யிடப்பெற்று விட்டன. முஸ்லிம்களுக்கான சட்ட திட்டங்கள் வகுக்கப் பட்டன. யூதர் தொழுதுவந்த திசை – (:கிப்லா) முஸ்லிம்களுக்கு நேர்மாறாக மாறிப்போய்விட்டது நோன்பும் ஹஜ்ஜும் கடமையாக்கப் பட்டன.
இவ் வலகிலுள்ள எந்த ஜாதியாரின். எம்மதத்தினரின் எந்த வேதத்தையேனும் ஆகமத்தையேனும் திறந்து பார்த்தாலும், அது முதலில்-(தொடக்கத்தில்) தன்னறிவிப்புக் கூறுவதையோ தன் கடன் இன்ன தென்று நேர்முகமாகச் சுட்டிக் காட்டுவதையோ காண்பது முடியாது. ஆனால், இங்கே பாருங்கள் | எடுக்க எடுப்பில் இவ்வேதம் தன்னை இன்னதென்று வெளிப்படையாக அறிவித்துப் பராக்குக் கூறுகிறது. களுக்கு எலிதாயத் அளிப்பதற்காகவே தான் தோன்றியிருப்பதாக ஐயந்திரிபற இது பிரகடனப்படுக்க அதே சமயத்தில் கண்ணிருந்தும் குருடரானாற்போன்று. இதயத்தின்மீது திரையிட்டுக்கொண்டகா’ : குத் தானோர் அறைகூவல் விடுக்கும் வேதமாகத் திகழ்வதாக வெள்ளையாகச் சொல்லுகிறது. ஆரம்பத்தி லேயே உடன்பாட்டு முறைப்படியும் எதிர் மறைப்பிரமாணமாகவும் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொள்ளும் இந்த அத்தி. திறப்புரைக்கு அடுத்தாற்போல் அமைக்கப்பட்டிருக்கும் இரகசியம் இது தான். இன்ன அவசியத்தின் நிமித்தமாகத்தான் இவ்வேதம் அருளப்பட்டிருக்கிற தென்பதை இதன் முதல் திருவாக்கியங் கள் திறந்து சொல்வதுடன் அத்தி. நெடுகவே. – ஏன், மற்றெல்லா அத்தி.களி னூடேயே ஓர் எச்சரிக்கை உண்டை நூல் போல் ஓடிக்கொண்டே யிருக்கிறது: அஃதென்ன தெரியுமா? அது தான் மனிதனொருவன் குறிப்பிட்ட இன்னமதக் கோட்பாட்டை வாயளவில் கடைப்பிடிக்கிறானா என்பதன்று அவன் உத்தமனாகவும் பக்திமானாகவும் இறைவனின் அருளைப் பெறக்கூடியவனாகவும் உயர்வதற்குரிய யோக்கியதாம்சம். ஆனால். அவன் சத்தொழுக்க முறைப்படி நடந்து, உள்ளத்தின் உறுதியுடன் ” சத்திய சன்மார்க்கத்தைக் கடைப் பிடிக்கிறானா என்பதே உன்னத லட்சியம் – மெய்யான பாதை – சத்தியமான சன்மார்க்கம் என்பதாகும். முதலில், இப்றாஹீம் நபிக்கு ( அலை ) அருளப்பட்ட அதே. சத்திய சன்மார்க்கந்தான் இது போதும் திருப்பி வலியுறுத்தப் பெறுகிற தென்றே இவ் அத்தி. இயம்புகின்றது. அந்த மகா நபியின் மதத்தைப் பின்பற்றுவ தாகச் சொல்லிக் கொண்டே யூத மதமும் கிறிஸ்து மதமும் எப்படி நேர்பாதையை விட்டு விலகிச் சென்று விட்டன என்பதையும் இந்த அத்தி. நன்கு விளக்குகிறது. எவனொருவன் மாறுசெய்யாமல் சத்தியத்துக்குத் தலைசாய்க்கிறானோ அவனே உத்தமன். எவனொருவன் மிக உயர்ந்த மதக்கோட்பாட்டின் வாரிஸ் என்று சொல்லிக்கொண்டு மாறு செய்கிறானோ அவன் உலுத்தன்.
வழி விலகிய மாற்றார்களுக்கு இந்த அத்தி . வாயாப்பைக் கடாவுவதுடன், மக்கத்தைத் துறந்து மதீனா வுக்குள் குடியேறிய முஸ்லிம்களை வீணே வம்புக்கிழுத்துப் போர்களைத் தொடுத்த அஞ்ஞானக் குறைஷிகள் மீது தற்காப்புக்காக முஸ்லிம்கள் எதிர்த்துப் போராட நேர்ந்த நிலையையும் நினைவூட்டுகிறது. மதீனாவுக்குள் திருநபியவர்கள் வந்து புகுந்ததும். எல்லா முஸ்லிம்களும் சேர்ந்து மக்காவின் மீது படையெடுத்துச் செல்ல வில்லை. ஆனால், அவர்கள் அஹிம்ஸாதர்ம சாத்விகத்துடன் சும்மா இருந்தார்கள். மக்காவிலிருந்த குறைஷி களே போர் முழக்கமிட்டு, மதீனாவை நோக்கிப் பலமுறை போரெழுந்தார்கள். எனவே, எதிர்த்து வரும் எதிரியைத் தற்காப்பினிமித்தம் தொகைக்கும் வழிவகையும் இங்கே இடம்பெற் றிருக்கிறது.
இஸ்லாத்தின் பரந்த கோட்பாடுகளாகிய தொழுகை. ஜ(க்)காத். நோன்பு . ஹஜ் முதலிய கடமை கள், சாசனம் வரைதல், தானம் வழங்குதல், விவாகம் செய்தல், அதை விலக்கு முறைகள், ஒப்பந்தங்கள் செய்து கொள்ளல் முதலியவற்றுக்கான சட்டதிட்ட நியதிகளை வகுத்துக் கொடுத்து. வட்டி, மதுவருந்தல்க சூது விரும்பல் முதலிய பஞ்சமா பாதகங்களை யொழித்து. ஒரே மூச்சில் அனைத்துக் கருத்தையும் ஒருங்கே திரட்டிக்காட்டி விட்ட பெருமை இந்தப் “பசு ‘அத்தி. க்கு உண்டு. நெடுகவே ஏக இறைவனை அடிக்கடி நினைவுகூரச் செய்து. இறுதியில் அவனுடைய புகழைச் சுருக்கித் திரட்டியளித்து, அவனிடம் அடியான் குறையிரக்க வேண்டிய பிரார்த்தனையைக் கற்றுக் கொடுப்பதுடன் முடிகிறது இது. முழுக் குர் ஆனையுமே இந்த அத்தி. சுருக்கித் திரட்டிக் காட்டிவிட்ட தென்கிறார் பிக்தால். வஹீ இறக்கப்படுவதன் சில சூக்ஷம விஷயங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஹிஜ்ரீ முதலிரு ஆண்டுகளுக்குள் இந்த அத்தி. யின் மிகப் பெரும்பகுதி வெளியாயிற் றென்பது வெள்ளிடை விலங்கல்.