ஆசிரியர் | நூருத்தீன் |
பதிப்பகம் | இலக்கியச் சோலை, Amazon |
பதிப்பு | 2020 |
வடிவம் | Paperback, Kindle |
பக்கம் | 52 |
விலை | ₹ 50.00 |
சிறுவர்கள் உலகம் களங்கமற்றது. அப்பருவம் தீவினைகளும் அழுக்கும் ஊடுருவத் தொடங்காத காலம். தாங்கள் கற்பதைப் பஞ்சைப்போல் உறிஞ்சிக்கொள்ளும் அவர்களின் இளைய பருவத்தில், அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு உகந்த கருத்துகளையும் ஈருலக வாழ்க்கைக்கும் பயனளிக்கவல்ல தகவல்களையும் அளிப்பது நமது கடமையாகிறது. இப்பணியை நம் முன்னோர்கள் காலங்காலமாக நீதிக் கதைகள் என்ற வடிவில் செயல்படுத்தி வந்தனர். சிறுவர்களுக்கு அறமும் பண்பும் ஒழுக்கமும் நீதியும் வீரமும் புகட்ட கதைகள் சிறப்பான வடிவமாக அமைந்தன.
அத்தகு கதை வடிவத்தில் புதிய விடியல் பத்திரிகையில் நூருத்தீன் எழுதிய சிறுவர்களுக்கான தொடர் ‘சிலேட் பக்கங்கள்’. அதன் நூல் வடிவமே ‘யார் இந்த தேவதை?’ எனும் நூல். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏதேனும் ஒருவகையில் உதவக்கூடிய கருத்துகள் நிச்சயமாக இந்நூலில் இருக்கின்றன. அவை சுவைபடவும் சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்திய அமேஸான்: https://www.amazon.in/dp/B084Z3DHLP/
அமெரிக்க அமேஸான்: https://www.amazon.com/dp/B084Z3DHLP/