மெஹர் – விமர்சனம்

by நூருத்தீன்

கோதரர் Mohamed Sardhar தான் YouTube link அனுப்பியிருந்தார். அசிரத்தையாகப் பார்க்க ஆரம்பித்தால் கவனத்தை முழுவதும் கவர்ந்துவிட்டது படம். படத்திற்காகக் கதை எழுதுவதைவிட நல்ல கதைகளைப் படமாக எடுத்தால் சிறப்பாகவே அமையும் என்பது என் கருத்து. இந்தப் படம் அதற்கு வலு சேர்த்தது.

மிகையற்ற நடிப்பு; தொய்வின்றி இயல்பாக நகரும் காட்சிகள்; திரைப்படங்களில் செயற்கையாகத் தென்படும் முஸ்லிம்களின் வசனம் போலன்றி இயல்பாக அமைந்திருந்த முஸ்லிம் கதாபாத்திரங்களின் உரையாடல் என்று நிறைய ப்ளஸ்.

ஆங்காங்கே தென்படும் குறைகள் புறந்தள்ளத்தக்கவை – ஒன்றைத் தவிர. டைட்டிலின்போது ஒலிக்கும் சூரா அல்-ஆலா பிழையுடன் உள்ளது. குர்ஆனின் சூரா/வசனம் என்பதால் அதைக் குறிப்பிடுவது கடமையாகிறது. அடுத்த படங்களில் இறை வசனங்கள் இடம் பெறும்போது அதில் இயக்குநர் தாமிரா கூடுதல் கவனம் செலுத்து வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

மெஹரின் போராட்டத்திற்கு மஹரில் தீர்வு சொல்லும் படம். நல்ல படம். இயக்குநர் தாமிரா & team-ற்கு வாழ்த்துகள்.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment