‘தாருல் இஸ்லாம்’ ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்கள் ‘நபிகள் நாயக வாக்கியம்’ என்ற நூலை 1923 ஆம் ஆண்டு வெளியிட்டார். 1925 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் 1929 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பும் வெளியாகியுள்ளன.
மிஷ்காத்துல் மஸாபீஹ் நூலிலிருந்து தொகுக்கப்பட்ட 451 நாயக வாக்கியங்கள் அடங்கிய சிறு நூல் இது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்பு.
மூன்றாம் பதிப்பின் PDF கோப்பை அண்ணன் ஜவாத் மரைக்காயர் இலங்கையிலிருந்து அனுப்பி வைத்திருந்தார். இந் நூலின் பிரதி என்னிடம் இல்லாத நிலையில் இது இன்று (நவம்பர் 24, 2018) எனக்குக் கிடைத்த பொக்கிஷம். அண்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு நல்லருள் புரிவானாக.
இந் நூலின் PDF கோப்பை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம், Download செய்யலாம்.
-நூருத்தீன்