குறுஞ் செய்தியும் நாமும்

by நூருத்தீன்

குறுஞ்செயலிகளுக்கு வாக்கப்பட்டு அதனுடன் நாம் வாழும் காலம் இது. அவற்றின் பயன் ஒருபுறம் என்றால் ஏற்படும் ஏகப்பட்ட உபாதைகள் மற்ற ஏழுத் திக்கு. ஒருவிதத்தில் பொழுதுபோக்கு என்றால், மற்றவிதத்தில் தலை குடைச்சல், நெஞ்சு எரிச்சல், மலச் சிக்கல், இத்தியாதி.

ஓரளவாவது இந்தக் குறுஞ்செய்தி செயலிகளுடன் சமரசமாய் வாழ சில கூடும், கூடாதவை பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. மொழிமின் என்ற எனது நூலில் சமூக ஊடக வாழ்க்கையை சிறிதளவு பேசியிருந்தேன். இவற்றை அதன் தொடர்ச்சி என்று கொள்ளலாம்.

  1. அனுப்பும், பகிரும் தகவல் அவசியமானதாக மட்டும் இருக்கட்டும். இல்லையெனில் அது குப்பை என்றறிக.
  2. நண்பர் தனிப்பட்ட முறையில் செய்தி, தகவல் பகிர்ந்தால் அதை acknowledge செய்யுங்கள். விரிவான கருத்து, கருத்து முரண்பாடு இருந்தால்தான் பதிலிடுவேன் என்றிராமல் ஒரு வார்த்தை நன்றி, பாராட்டு, வாழ்த்து கூட போதும்.
  3. கேட்கப்படும் உதவி, சந்தேகம், விளக்கங்களுக்கு பதிலிடுங்கள். தெரியாது என்றால் கூச்சப்படாமல் சொல்லிவிடுங்கள்.
  4. தங்களுக்கு உதவிய பதிலளித்த நண்பருக்கு உடனே மறக்காமல் நன்றி உரைத்துவிடுங்கள். கேட்டது கிடைத்ததும் மெளனமாக இருந்து விடுவது அவரை மதிக்காதைப்போல் ஆகிவிடும். ‘காரியவாதி’ என்ற அவப்பெயரும் சேரக்கூடும்.
  5. எழுத்துகளும் வார்த்தைகளும் நமது உள்ளத்தைப் பிரதிபலிக்க போதாதவை. நீங்கள் எழுதுவது சில சமயங்களில் மற்றவரைப் புண்படுத்தி விடலாம். உடனே மனதார மன்னிப்பு கேட்டுவிடுவது சிறப்பு. மன்னிப்பு கேட்பவன் ‘மனுஷன்’. மன்னிப்பவன் ‘பெரிய மனுஷன்’. நீங்கள் ‘மனிதன்’ ஆக மாறுங்கள். உங்கள் நண்பர் ‘பெரிய மனிதன்’ ஆக உதவுங்கள்.

-நூருத்தீன்

நம்பிக்கை மாத இதழில் ஆகஸ்ட்-செப்டெம்பர், 2020 வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்


Creative Commons LicenseThis work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment