ஜே.எம். சாலிக்கு கலாசாரப் பதக்கம்
சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளரும் செய்தியாளருமான ஜமாலுதின் முகமது சாலிக்கு அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப்
பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டோனி டான் கெங் யாமிடம் இருந்து நேற்று கலாசாரப் பதக்கத்தைப் பெற்ற திரு. சாலி, “இந்த கௌரவம் தமது எழுத்துப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம்” என்று மகிழ்ந்தார்.
சமூகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை தமது எழுத்தின் நோக்கமாகக் கொண்டுள்ள 73 வயது திரு. சாலி, அந்த வகையில் தமது எழுத்துப் பணி தமக்கு நிறைவளிப்பதாகக் கூறினார்.
தஞ்சையில் பிறந்த திரு. சாலி, தமிழ் மொழியில் முதுகலை பட்டப் படிப்பை முடித்த பின், 24வது வயதில் தமிழ் முரசு நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்ற சிங்கப்பூர் வந்தார்.
தொலைக்காட்சி, வானொலி செய்திப் பிரிவுகளில் பணியாற்றி உள்ள திரு. சாலி, தமிழகத்தின் ஆனந்த விகடன் வார இதழிலும் 10 ஆண்டுகளுக்குப் மேலாக பணிபுரிந்துள்ளார்.
தமிழ் இலக்கியத்துக்காக கலாசாரப் பதக்கம் பெறும் 5வது மூத்த எழுத்தாளர் திரு. சாலி.
(தமிழ் முரசு பத்திரிகையில் திரு. வில்சன் சைலஸ் எழுதிய செய்தியிலிருந்து சில பகுதிகள்.)
நன்றி: தமிழ் முரசு, சிங்கப்பூர் 18-10-2012
தொடர்புடைய சுட்டிகள்: