தோழர்கள் புத்தகம் - காயல் அறிமுக நிகழ்ச்சி அழைப்பிதழ்

காயல்பட்டணத்தில் தோழர்கள் முதலாம் பாகம் அறிமுக நிகழ்ச்சி, சமூக நல்லிணக்க மையம் தஃவா சென்ட்டர் மூலம் நடத்தப்பட்டது. அந்நிகழ்வுக்கான

அழைப்பிதழ்.

"தோழர்கள்" புத்தகம் அறிமுக நிகழ்ச்சி! சமூக நல்லிணக்க மையம் ஏற்பாடு!

ஓரிறையின் நற்பெயரால்!

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்..,

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் "தோழர்கள்" தொடரிலிருந்து 20 தோழர்கள் அடங்கிய தொகுப்பு, சத்தியமார்க்கம் பதிப்பகத்தின் முதல் வெளியீடான, "தோழர்கள்! புனிதர்களின் அற்புத வரலாறு! முதலாம் பாகம்", அல்லாஹ்வின் பேரருளால் இன்ஷா அல்லாஹ் வரும் (3-2-2012) வெள்ளிகிழமை மாலை 4.30 மணிக்கு நமது தஃவா சென்டர் மூலம் அறிமுகம் செய்யப்பட இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!

பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!

அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், "தோழர்கள்" மற்றும் "தோழியர்கள்" எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று புனிதர்களை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கின்றார். அல்ஹம்து லில்லாஹ்!

'இந்நூலை. நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும்.

மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க வேண்டும்.' வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!

புத்தகம் அறிமுகம் மற்றும் சிறப்புரை : சகோ. மவ்லவி எஸ்.எச்.ஷரஃபுதீன் உமரி,

இடம் : குட்டியாப்பா பள்ளி வளாகம்.

அன்புடன் அழைக்கிறது.

தஃவா சென்டர்,

காயல்பட்டினம்.

தகவல்: http://www.kayalnews.com/news/kayal-news/1491-q-q-

 

e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker