செவ்வாய் நிலா

Written by நூருத்தீன் on .

செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த போபோஸ் நிலா, பல்வேறு துண்டுகளாக உடைந்து சிதறும் என்பதைப் படித்து பதறித் துடித்துவிட்டேன்.

செவ்வாய் அம்மா இனி தன் குழந்தைக்கு எதைக் காட்டிச் சோறூட்டுவாள்?

செவ்வாய் காதலன் இனி தன் காதலியை எப்படி வருனிப்பான்?

அவர்களுக்கு நிலா காயாமல் இனி நேரம் எப்படி நல்ல நேரமாகும்? ...

என்றெல்லாம் மனசுடைந்துக் கொண்டிருக்கையில் இன்னும் ஜஸ்ட் ஒரு கோடி வருஷத்திற்குள் அந்த நிலா காலி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அத்தனை வருஷம் வாழக் கொடுத்து வெச்சவனுக்கு கண் பார்வை தொலைந்து காதும் டமாரமாகியிருக்குமே, இப்ப ஏன் அவனைப் பயமுறுத்தனும் என்கிற இங்கிதம் வேணாம் அந்த விஞ்ஞானிகளுக்கு?

படித்த முட்டாள்கள்!

அவர்களை அந்த போபோஸுக்கு கிரஹம் கடத்தனும்.

இன்னும் நூறு வருஷத்தில் செத்து விடுவேன் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் 'தில்'லா இதைப் படிக்கலாம் -

http://inneram.com/news/world/5701-mars-moon-phobos.html

 

 

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker