சாட் மசாலா

Written by நூருத்தீன் on .

தேசப் பிதாவின் சிலை அமைந்துள்ள சென்னை பீச்சுக்கு விஜயம் அமைந்தது. காற்று வாங்கப்போய் பெருமூச்சாய் காற்று விட்டதுதான் மிச்சம். மூடியிருந்த வானத்தினால் அவ்வளவு புழுக்கம்.

இருந்தாலும் அலையும் மணலும் குதிரையில் அமர அச்சப்பட்டு அழுது கொண்டே புகைப்படம் எடுத்துக் கொண்ட சிறுமிகளும் ‘ஸார் சுண்டல்’

என நெருங்கும் சிறுவர்களும் .... ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிடைத்த சுகானுபவம்.

முஸ்லிம் குடும்பம் ஒன்று அமைத்திருந்த பானி பூரி, பேல் பூரி ஸ்டாலின் பண்டங்களை ஆசையாய் அசை போட்டு ருசிக்கும்போதுதான் அந்த போர்டு கண்ணில் பட்டு கவனத்தைக் கவர்ந்தது.

“அஸர், மக்ரிப், இஷா ஜமாத் வைக்கப்படும்”

மனத்திற்குள் காற்று.

 

 

 

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker