இதய வளையம் - மரியம் நூரின் அரிய கண்டுபிடிப்பு
டென்மார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிஎச்டி மாணவி மரியம் நூர் இதய வால்வுகளில் ஏற்படும் கசிவுகளைக் கட்டுப்படுத்தும் வளையம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதய வால்வுகளில் கசிவு உள்ள நோயாளிகளின் பெருந்தமனியைச் சுற்றி இச்சிறு வளையத்தை மாட்டிவிட்டால் அது அவர்களைக் குணப்படுத்தும் என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.